OPS on Sengottaiyan Press Meet 
தமிழ்நாடு

’தொண்டர்களின் குரலாய்’ செங்கோட்டையன் : ஓபிஎஸ் வரவேற்பு, உற்சாகம்

OPS on Sengottaiyan Press Meet : அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் குரலை செங்கோட்டையன் பிரதிபலித்து இருப்பதாக, ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Kannan

ஒன்றிணையுமா அதிமுக? எடப்பாடி? :

OPS on Sengottaiyan Press Meet : பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க எடுக்கப்பட்ட எந்த முயற்சியையும் ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதிமுகவிற்குள் மீண்டும் சேர்க்க முடியாது என்பதில் அவர் உறுதி காட்டுகிறார். ஆனால், 2026 தேர்தலில் அதிமுக ஒன்றுபட்டதால் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்று பிரிந்து சென்றவர்களும், சசிகலா, ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

தனி வழியில் செங்கோட்டையன்? :

இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி மீது ஆறு மாதமாக அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன், சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனை நடத்தினார். தனது நிலைப்பாட்டை 5ம் தேதி தெரிவிப்பதாக அவர் கூறியது, அதிமுக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது.

எடப்பாடி மீது விமர்சனம் :

அதன்படி கோபியில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்(Sengottaiyan Press Meet), அதிமுகவில் தனது பங்கு குறித்து எடுத்துக் கூறினார். பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்த்தால் தான் அதிமுகவுக்கு வெற்றி என்று தெரிவித்த அவர், அதை எதிர்க்கட்சி தலைவர் ஏற்க மறுத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்தார்.

எடப்பாடிக்கு 10 நாட்கள் அவகாசம் :

2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஒன்றுபட்ட அதிமுகவால் மட்டுமே முடியும், இதுபற்றி முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமி-க்கு (EPS vs Sengottaiyan) 10 நாட்கள் அவகாசம் தருகிறேன். இதற்கு அவர் உடன்படா விட்டால், பிரிந்து சென்ற அனைவரும் இணைந்து அதை செயல்படுத்தவோம் என்று தெரிவித்தார்.

தொண்டர்கள் குரலாய் செங்கோட்டையன் :

செங்கோட்டையனின் கருத்து குறித்து தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்(O Panneerselvam), அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன், எம்ஜிஆர் கட்சி தொடங்கியதில் இருந்து அதிமுகவுக்காக பாடுபட்டு வருகிறார். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளராக இருந்துள்ளார்.

உண்மையான தொண்டர் செங்கோட்டையன் :

23 ஆண்டுகளாக மாவட்ட செயலாளர், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் செங்கோட்டையன். அனைத்து மக்களையும் அரவணைக்கும் தன்மையுடன், கட்சிக்காக அவர் ஆற்றிய பணி உண்மையிலேயே அளப்பரியது எனப் பாராட்டினார்.

மனதின் குரலாக ஒலித்த செங்கோட்டையன் :

பல்வேறு சூறாவளிகள், சுனாமிகள் கட்சிக்கு வந்த போதும், நிலையாக நின்று, இந்தக் கட்சியை வளர்ப்பதற்காக அவர் பாடுபட்டுள்ளார். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும், கட்சி ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி செய்தால், தான் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் நிறுவ முடியும்.

மேலும் படிக்க : ’ஒன்றுபட்ட அதிமுக’: EPSக்கு 10 நாள் கெடு:மனம் திறந்த செங்கோட்டையன்

செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் வாழ்த்து :

எனது மனதின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பதை, அவர் பிரதிபலித்து இருக்கிறார். செங்கோட்டையனின் எண்ணம், மனசாட்சி நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்(OPS on Sengottaiyan). அதற்காகத் தான் நாங்களும் போராடி கொண்டிருக்கிறோம். எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாத நிலை சூழல் நான்கைந்து ஆண்டுகளாக நிலவி வருகிறது” இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

================