Oil company officials warn of action against spreading rumors about petrol and diesel shortage in Tamil Nadu  google
தமிழ்நாடு

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை : எண்​ணெய் நிறுவனங்​கள் எச்சரிக்கை

Fuel Shortage in Chennai : தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து வதந்திகளை பரப்புவோர் மேதகு நடவடிக்கை எடுக்கப்படும் என எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Rohini

எரிபொருள் தட்டுப்பாடு

Fuel Shortage in Chennai : தொடரும் ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்தி வரும் தீவிர போர் தாக்​குதலால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் பெரிதளவில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் சமையல் எரி​வாயு பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, வணிக பயன்​பாட்​டுக்​கான கேஸ் சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

வீட்டு உபயோக சிலிண்​டர் மட்​டும் கட்​டுப்​பாடு​களு​டன் பொது​மக்​களுக்கு விநி​யோகிக்​கப்​படு​வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வதந்தியால் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர போவதாகவும் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட போவதாகவும் எழுந்த வதந்திகளை அடுத்து தமிழகம் முழுவவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களால் பொதுமக்கள் குவிந்த வண்ணம் வருகின்றனர்.

90 நாட்களுக்கு இருப்பு

நாடு முழு​வதும் அடுத்த 90நாட்​களுக்​குத் தேவை​யான பெட்​ரோல் மற்​றும் டீசல் கையிருப்பு உள்ளதாகவும் , சென்னை முதல் கன்​னி​யாகுமரி வரை உள்ள 7 ஆயிரம் பெட்​ரோல் பங்க்​கு​களி​லும் விநி​யோகம் சீராக நடைபெற்று வருவதாகவும் எண்ணெய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேவைக்கு அதிகமான எரிபொருட்களை வாங்க வேண்டாம்

மக்​கள் தேவைக்கு அதி​க​மாக வாங்க வேண்டாம் என்றும் அதனால் செயற்கை தட்​டுப்​பாடு உரு​வாகும் நிலை ஏற்​படக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .மேலும், கேன் மற்​றும் பாட்​டில்​களில் பெட்​ரோல் வாங்​கு​வது மிக​வும் ஆபத்​தானது.

தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் இப்​போதைக்கு தட்​டுப்​பாடு இல்​லை. தமிழகத்​தில் உள்ள 14 முனை​யங்​களில் 21 நாட்​களுக்​குத் தேவை​யான அளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : தேவையற்ற அச்சத்தால் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள் : வதந்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு!

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

தமிழகத்​தில் பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு என்று சமூக ஊடகங்​களில் தவறான தகவல்​களைப் பரப்​பு​கின்​றனர். இதனால், நெருக்​கடி​யான சூழ்​நிலை ஏற்​படு​கிறது.

இது​போன்ற வதந்​தி​களைப் பரப்​புபவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று எண்ணெய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதற்றம் அடைய வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தொடரும் இந்த எரிபொருள் சம்பந்தப்பட்ட வந்தந்திகளை அடுத்து முதல்வர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அ

தன்படி மேற்​காசி​யப் போர்ச்​சூழல் காரண​மாக, தற்​போது ஏற்​பட்​டிருக்​கும் நெருக்​கடிகளை எதிர்​கொள்ள, 2 நாட்​களுக்கு முன்பு உயர்​மட்ட ஆலோ​சனை மேற்​கொண்​டதோடு, சமையல் எரி​வாயு சிலிண்​டர் தட்​டுப்​பாடு, பெட்​ரோல் - டீசல் உள்​ளிட்ட எரிபொருள் விநி​யோகம் குறித்து பிரதமருக்​கும், தொடர்​புடைய மத்​திய அமைச்​சர்​களுக்​கும் கடிதம் எழு​தி​யுள்​ளேன்.

தமிழக உணவுத்​துறை அமைச்​சர் சக்​கர​பாணி தலை​மை​யில் எரி​வாயு தட்​டுப்​பாட்டை எதிர்​கொள்​வது குறித்த ஆலோ​சனைக் கூட்​ட​மும் நேற்று முன்​தினம் நடை​பெற்​றுள்​ளது.

போது​மான எரிபொருள் கையிருப்​பில் உள்​ள​தாக மத்​திய அரசின் சார்​பில் தெரிவிக்​கப்​பட்டு வரும் நிலை​யில், பொது​மக்​கள் யாரும் அச்​சப்​பட​வோ, பதற்​றம் கொள்​ளவோ வேண்​டாம் என கேட்​டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்