Only those who have received entry Pass will be allowed to attend TVKexecutives meeting held in Salem tomorrow. Google
தமிழ்நாடு

பிப்.13 சேலம் : தவெக சந்திப்பு நிகழ்ச்சி : பாஸ் இருந்தால் அனுமதி

சேலத்தில் நாளை நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் நுழைவுச் சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

முதன்முறையாக தேர்தலில் போட்டி

Only those who have received entry Pass will be allowed to attend TVKexecutives meeting held in Salem tomorrow : தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், விஜய் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவது மட்டுமின்றி, உரையாற்றவும் செய்கிறார்.

பிற்பகலில் சந்திப்பு நிகழ்ச்சி

இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (பிப்ரவரி 13ம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்பு

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5,000 பேர் மட்டுமே அனுமதி

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுமக்கள் வரவேண்டாம்

வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை. அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதை கண்டிப்பாகத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதலில் சேலத்தில் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி கிடைக்காததால், நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டது.

விஜய் உரையாற்றுகிறார்

இந்தக் கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தும். வழக்கம் போன்று மத்திய அரசை சாடியும் விஜய் உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. அதிமுகவும் அவரை எதிர்க்க தொடங்கி விட்டதால், அதற்குரிய பதிலையும் அவர் அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

வேலூரில் பொதுக்கூட்டம்

இதைத்தொடர்ந்து இம்மாத இறுதியில் வேலூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

==============