Udhayanidhi arrested: DMK cadres stage road blockades across Tamil Nadu. google
தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது : “தமிழகம் முழுவதும் திமுக சாலைமறியல், போராட்டம் : களத்தில் இறங்கிய காவல்துறை..!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rohini

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது

தஞ்சையில் நடைப்பெற்ற மேகேதாட்டுஅணை விவகாரம் தொடர்பாக நடைப்பெற்ற போராட்டத்தில் இரட்டை அர்தத்தில் பேசியிருந்தார் , உதயநிதியின் இந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்புகள் கிழம்பிய நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதியை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

தஞ்சை காவல் துறை வழக்கு பதிவு செய்து ,கைது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் தஞ்சை போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,வழக்கு குறித்து காவல் துறை விளக்கம் அளித்த நிலையில் உதயநிதி அழைத்துச் செல்லப்படுகிறார்

கைது நடவடிக்கை குறித்து உதயநிதி ஸ்டான் கூறியதாவது

காவல் துறையின் என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாகவே பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொய் செய்தியை பரப்பி வெறும் திசை திரும்பும் அரசியலை மட்டுமே தவெக அரசு செய்து வருகிறது. என் மீதான நடவடிக்கையை சட்டப்படி சந்திப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்

உதயநிதி கைது , நாடாளுமன்றத்தில் திமுகவினர் போராட்டம்

எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டு கண்டங்களை தெரிவித்திருக்கின்றனர்

உதயநிதி கைது, தமிழகம் முழவதும் திமுகவினர் போரட்டம்

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , குறிப்பாக தஞ்சாவூரில் திமுக , தவெகவினர் இடையே நேரடி வாக்குவதமானது ஈடுப்பட்டு வருகின்றனர், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டிருக்கிறது ,

கைது நடவடிக்கையின் காரணமாக பல்வேறு இடங்களின் கடை அடைப்பு , சாலை மறியல் , குறிப்பாக திருச்சி, நாகை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவினர் போராட்டம் , பல இடங்களில் பரபரப்பு

உதயநிதி கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் ,பல்வேறு இடங்களில் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது இதனால் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது

கைது செல்லப்பட்டு தஞ்சைக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி

இந்த சூழலில் கைது செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு காவல் வாகனம் மூலம் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார் , மேலும் பின் தொடர்ந்து வந்த திமுகவின் வாகனங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கேளம்பாக்கம் சாலையில் திமுகவினருக்கும் ,காவல்துறைக்கு இடையே தள்ளுமுள்ளானது ஏற்ப்பட்டுள்ளது.இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது

==========================