Opposition parties devising a strategy to field Seeman as a common candidate to defeat TVK in by-election google
தமிழ்நாடு

”இடைத்தேர்தலில் கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்” : அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராக சீமான்! : ஒரே அணியில் DMK, ADMK...

இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்தும் வகையில், சீமானை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

Kannan

மாறிவிட்ட தமிழக அரசியல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் கணக்குளை மாற்றி காட்டி இருக்கு. தமிழகம் என்றால் திராவிட கட்சிகள் தான் என நிலைப்பாடு உடைக்கப்பட்டு, தவெக ஆட்சிக்கு வந்துள்ளது.

சிதறிய திமுக கூட்டணி

திராவிட கட்சிகளை மட்டுமே ஆதரித்த பல கட்சிகள் இன்று, தவெக பக்கம் நிற்கின்றன. திமுக கூட்டணி முழுமையாக உடைந்து போய் இருக்கிறது.

ஆறு தொகுதிகளில் இடைத்தேர்தல்

இரு தொகு​தி​களில் வென்ற முதல்​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். இதனால் திருச்சி கிழக்​கு காலியாக இருக்கிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். எனவே, பெருந்​துறை, தாராபுரம், மது​ராந்​தகம், அம்​பாச​முத்​திரம், விராலிமலை ஆகிய 5 தொகு​தி​களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

கங்கணம் கட்டியுள்ள எதிர்க்கட்சிகள்

இடைத்​தேர்​தலில் தவெக கூட்​ட​ ணியை வீழ்த்​தியே தீர வேண்​டும் என்ற முனைப்​பில் இருக்​கும் திமுக, ஆளுங்​கட்​சிக்கு எதி​ராக அனைத்து எதிர்க்​கட்​சிகளை​யும் ஒன்​றிணைத்து பொது வேட்​பாளர்​களை நிறுத்த ஆலோ​சித்து வரு​கிறது.

நாம் தமிழர் கட்சி

சட்​டப்​பேரவை தேர்​தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்​சி, அனைத்து இடங்​களி​லும் தோல்​வியைச் சந்​தித்​ததுடன், வாக்கு வங்​கி​யும் 8 சதவீதத்​திலிருந்து 4 சதவீத​மாகக் குறைந்​தது.

காரைக்​குடி​யில் போட்​டி​யிட்ட அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் டெபாசிட் இழந்து நான்​காம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்.

அம்பாசமுத்திரம் - சீமான் போட்டி

எனவே, சீமானை ஒரு தொகுதியில் பொது வேட்பாளராக நிறுத்த திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு, காய் நகர்த்தி வருகின்றன. அந்த வகையில், அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் தவெகவை எதிர்​கொள்ள, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை எதிர்க்​கட்​சிகளின் பொது​வேட்​பாள​ராக களம் இறக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தவெகவில் இசக்கி சுப்பையா

கடந்த தேர்​தலில் அம்​பாச​முத்​திரத்​தில் அதி​முக சார்​பில் வென்ற இசக்கி சுப்​பை​யா, இரண்​டாம் இடம் பிடித்த காங்​கிரஸ் வேட்​பாளர் மற்​றும் மூன்​றாம் இடம்​பிடித்த தவெக வேட்​பாளர் என மூவருமே தற்​போது தவெக அணி​யில் உள்​ளனர்.

ஆதரவு தர அதிமுகவும் தயார்!

சீமானை சம்​ம​திக்க வைக்​கும் பொறுப்பு முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யிட​மும் திரைமறைவு பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வரு​வ​தாக​வும் கூறப்படுகிறது.

தவெகவை சமாளிக்க சீமான் தேவை

அம்​பாச​முத்​திரத்​தில் சீமானை வெற்றி பெறச்​செய்து சட்​டப்​பேர​வைக்​குள் அனுப்​பி​னால், அது முதல்​வர் விஜய்க்​கும், தவெக​வுக்​கும் சட்​டப்​பேர​வை​யில் கடுமை​யான அரசி​யல் நெருக்​கடியை கொடுக்​கும்.

தயாராகும் நாம் தமிழர் கட்சி

சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சிகளின் குரல் மேலும் வலுப்​பெறும் என திமுக கணக்கு போடு​வ​தாக கூறப்​படு​கிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி வெளிப்படையாக சீமான் அறிவிக்கா விட்டாலும், நாம் தமிழர் நிச்சயம் போட்டியிடும் என்று கூறி இருக்கிறார்.

=========================