O. Panneerselvam Criticized Edappadi K. Palaniswami in DMK Campaign 2026 : திமுக சார்பில் இன்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
திமுகவிற்காக ஓபிஎஸ் பிரச்சாரம்
திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட ஓபிஎஸ், திமுகவை பலப்படுத்தும் விதமாக தென்காசியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.
எடப்பாடி மீது விமர்சனம்
அப்போது அவர், தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்துக்கொண்ட ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான். அவர் பொதுச் செயலாளர் ஆனது முதல் 10 தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார் என்றார்.
பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை
மேலும் அந்த நபரின் பெயரைச் சொல்லக்கூட நான் விரும்பவில்லை. ஏனென்றால் ஊர்ந்து சென்று பதவியைப் பெற்று, பதவி தந்தவருக்கே நன்றி இல்லை.
நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரை பழித்துப் பேசலாமா? துரோகம் இழைத்துவிட்டார். நன்றி மறந்தவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். வரும் தேர்தலிலும் அதுதான் நடக்கும்" என்றார்.
செய்தியாளர் பேட்டியில் ஓபிஎஸ்
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலவர் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு உள்ளது என்றார்.
முதல்வரின் சிறப்பான திட்டங்கள்
மேலும், முதல்வராக பொறுப்பேற்றது முதல் அனைத்து மக்களும் பயன்படும் வகையில் சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
அதிமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவை கட்சியாகவும் சரி ஆட்சியாகவும் சரி மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனால் தான் எடப்பாடிக்கு தொடர் தோல்வியை மக்கள் தந்தார்கள் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் வரலாற்று சாதனை படைப்பார்
மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக திமுக வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் வரலாற்று சாதனை படைப்பார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.