Orange alert issued for four districts as Depression is expected to make rainfall near Chennai Rain tonight IMD Chennai
தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு "Orange Alert" : மிக கனமழை பெய்யும்

Chennai Rain Update Today in Tamil : தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்றிரவு கரையை கடக்கும் நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Kannan

வட மாவட்டங்களில் கனமழை

Chennai Heavy Rain: Next Weather Forecast & Warnings Update in Tamil : வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒரே இடத்தில் நீடித்து வருகிறது. அதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

பலத்த மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நேற்று பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று காலை 11 மணி வரை சென்னையில் மழை நீடித்ததால், சாலைகள் வெள்ளக் காடாகின. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. இதனால், பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சென்னை அருகே கரையை கடக்கும்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்(Chennai Weather Update), தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

சென்னை, புதுச்சேரி கடற்கரையை நெருங்கி இன்று நள்ளிரவு, மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் எனத் தெரிகிறது.

நான்கு மாவட்டங்களில் அதி கனமழை

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்க்கும். இந்த மழையானது விட்டு விட்டு பெய்யும்.

மிதமான மழை பெய்யும்

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 20 செ.மீ. மழை

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செமீ மழை பதிவாகி உள்ளது. வடசென்னை மற்றும் திருவற்றையூர் பகுதிகளில் மழை அதிகமாக இருந்தாலும் தென் சென்னை மற்றும் தெற்கு பகுதிகளில் மழை குறைவாக இருந்தது.

இதனிடையே, சென்னை, திருவள்ளூர் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலர்ட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

===