தலைமைச் செயலாளர் உத்தரவு
இது குறித்து அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் கடந்த 5ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது அசைவு மற்றும் அசையா சொத்துக்கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும்...
வரும் 31ஆம் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வேறு பெயரில் சொத்து இருந்தாலும் பதிவு அவசியம்
வேறு யார் பெயரிலாவது அரசு ஊழியர்கள் சொத்துக்களை வாங்கி இருந்தாலும், அது குறித்த விவரங்களையும் அந்த நபருக்கும் அரசு ஊழியருக்கும் இடையில் உள்ள உறவின் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
விவரங்கள் கொடுத்தால் தான் பதவி உயர்வு
குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும் ஊழியர்களின் பெயர்தான் பதவி உயர்வுப் பட்டியலில் இடம்பெறும்.
சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு
2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள்...
தங்கள் பணியில் சேர்ந்த முதல் மூன்று மாதத்திற்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும், பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அரசு ஊழியர்கள் இடையே கவனம்
அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படாத சூழலில், தற்போது தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களைப் பதிவு செய்ய தவெக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் இடையே கவனம் ஈர்த்துள்ளது.
=======================