சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவுடைந்த 1.5 வயதுக் குழந்தையின் உறுப்புகள் தானம் செய்யபட்டு 3 குழந்தைகளுக்கு வாழ்வு கிடைத்துள்ளது.
தமிழக மருத்துவ வரலாற்றில் நெகிழ்ச்சியான தருணம்
தமிழக மருத்துவத் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக, வெறும் 19 மாதங்களே ஆன 'கர்ணன்' என்ற பிஞ்சுக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டு, மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளன.
தங்களது குழந்தையை பிரிந்த மீளாத் துயரிலும் பிற உயிர்களைக் காக்க பெற்றோர் எடுத்த இந்த உன்னத முடிவு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
நோய் பாதிப்பும் சிகிச்சையும்
'ஹைட்ரோசெபாலஸ்' (Hydrocephalus) எனப்படும் மூளைத் தண்டுவட நீர் தேங்கும் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தை கர்ணனுக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு
ஆறு நாட்கள் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
உறுப்பு தானமும் 3 குழந்தைகளுக்கு புதிய வாழ்வும்
தன் குழந்தையைப் பறிகொடுத்த சோகத்திலும், பிற குழந்தைகளின் புன்னகையில் தன் குழந்தையைக் காண கர்ணனின் பெற்றோர் உறுப்பு தானத்திற்கு முன்வந்தனர்.
3 பிஞ்சுக் குழந்தைகளுக்கு தற்போது மறுவாழ்வு
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் (TRANSTAN) வழிகாட்டுதலின்படி, குழந்தையின் இதயம் மற்றும் சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் வெற்றிகரமாக எடுக்கப்பட்டன.
இதன் மூலம் தீவிர நோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பிஞ்சுக் குழந்தைகளுக்கு தற்போது மறுவாழ்வு கிடைத்துள்ளது.
தனது இறப்பிலும் குழந்தை கர்ணன் 3 குழந்தைகளுக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளது.. மீளாத்துயரத்திலும் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க : திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதம் : இனி ஆன்லைனில் பெறலாம் : ஆர்டர் செய்வது எப்படி.. எளிய வழிமுறை!
====