P. Shanmugam has put an end to political speculation praising the action taken by TVK govt regarding Inam land issue AI generated
தமிழ்நாடு

”இனாம் நிலம், முதல்வர் விஜய் துணிச்சலான நடவடிக்கை” : மார்க்சிஸ்ட் பாராட்டு : குதிரைபேரம் சண்முகம் கண்டனம்!

இனாம் நில விவகாரத்தில் தவெக அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டியுள்ள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Kannan

பாஜக வேறு - தவெக வேறு

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதையும், பாஜக பிற கட்சிகளை உடைப்பதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது.

பாஜகவின் வியூகம் ஜனநாயக விரோதம்

பிற கட்சிகளை உடைத்து, அதன் மூலம் தனது பலத்தை அதிகரித்துக் கொள்வது பாஜகவின் அரசியல் வியூகம். இது ஜனநாயகத்திற்கு எதிரானது.எ

குதிரை பேரம் - மக்கள் எதிர்க்க வேண்டும்

தனிநபர்கள் ராஜினாமா செய்துவிட்டு பிற கட்சிகளில் இணைவதை, பாஜகவின் திட்டமிட்ட உடைப்பு நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்த வேண்டாம்.

இந்த குதிரை பேர அரசியல் கலாசாரத்தைக் கண்டு மக்கள் கோபப்பட வேண்டும்.

இனாம் நிலம் - அரசுக்கு பாராட்டு

கரூர் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த 'இனாம் நிலம்' தொடர்பான சிக்கலுக்குத் தமிழ்நாடு அரசு தீர்வு கண்டிருப்பதை சிபிஎம் வரவேற்கிறது.

இனாம் நிலங்களை கோயில் நிலங்கள் என்று தவறாகச் சித்தரித்து, இந்துத்துவ அமைப்புகள் நீண்ட காலமாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்து வந்தன.

முதல்வர் விஜய்க்கு பாராட்டு

நீதிமன்றத் தடைகளைத் தாண்டி, இந்த நிலங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்கி முதலமைச்சர் விஜய் எடுத்திருப்பது மிகவும் துணிச்சலான நடவடிக்கை.

தனி ஆணையம் அவசியம்

இது கரூர் மாவட்டத்திற்கு மட்டும் அல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இத்தகைய பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் பொருந்தும் வகையில், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தத் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தி இருப்பதாக” பெ. சண்முகம் தெரிவித்தார்.

=================