Parandur Airport: TVK government has not put forward any demands; Union Government  google
தமிழ்நாடு

”பரந்தூர் விமான நிலையம்” : தவெக அரசு எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை : ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக விளக்கம்...!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க குறித்து தவெக அரசு எந்த விதமான கோரிக்கையும் முன்வைக்கவில்லை என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது

Rohini

பரந்தூர் விமான நிலையம் , தவெக அரசு எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை , மத்திய அரசு விளக்கம்

பரந்தூர் விமான நிலையம் வராது என தமிழக் வெற்றி கழகம் மக்களிடம் சொல்லி வரும் நிலையில், பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ கைவிட வேண்டும் என்றோ தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

விமான நிலையத்திற்காக கையகப்படுத்தபடுத்தப்படும் விவசாய நிலங்கள்

கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தி ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்தத் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.

இந்த விமான நிலைய திட்டத்திற்கு சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பரந்தூர் கிராம் தேர்ந்தெடுக்கப்பட்டது .

பரந்தூர் கிராமம் உள்பட அருகில் உள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு உத்தேசித்திருக்கிறது.

பரந்தூர் விமான நிலையம் : மக்களிடையே எதிர்ப்பு

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இப்பகுதி மக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

இந்தத் திட்டத்திற்காக முழுமையாக கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்

மத்திய அரசு விளக்கம் அளித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்திற்கு (TIDCO) கடந்த ஏப்ரல் 7, 2025 அன்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொள்கை ரீதியிலான அனுமதியை வழங்கியது

செப்டம்பர் 2024-இல் TIDCO சமர்ப்பித்த விண்ணப்பம் படி, இந்த விமான நிலையத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ.10,500 கோடி ஆகும். இந்த விமான நிலையத் திட்டத்தை மாற்றுவது அல்லது செயல்படுத்துவது என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் முடிவைப் பொறுத்ததேயாகும்

விமான நிலைய கையகப்படுத்துதல் ,மாநில அரசின் பொறுப்பு, மத்திய அரசு விளக்கம்

ஒன்றிய அரசி அறிக்கையில் நிலம் கையகப்படுத்துதல், திட்டத்திற்கான நிதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவது போன்ற செயல்பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது திட்டத்தை மேம்படுத்தும் நிறுவனத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்திருக்கிறது

தவெக அரசின் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான தீர்மானம்

விஜயின் 'தமிழக வெற்றிக் கழகத்தின்' முதல் மாநாடு கடந்த வருடம், விக்கிரவாண்டியில் நடைபெற்றபோது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதனைத் தொடர்ந்து விஜய் ஜனவரி 20 அன்று பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ள பரந்தூர் விமான நிலையம் குறித்த எழுத்துப்பூர்வ அறிக்கை

விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தவெக அரசு இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், மாற்று இடங்களை ஆராய்ந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்த நாடாளுமன்ற விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

=============================