PM Modi Wishes To Kamarajar Birthday 2025 in Tamil 
தமிழ்நாடு

Modi: காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்

PM Modi Wishes To Kamarajar Birthday : பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Kannan

பெருந்தலைவர் காமராஜர் :

PM Modi Wishes To Kamarajar Birthday : விடுதலை போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமான காமராஜர், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். இதன் காரணமாக இந்திய அரசியலில் "கிங்மேக்கர்" என்று காமராஜர் அழைக்கப்பட்டார்.

தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு :

மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், ஏழைகள், பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார் காமராஜர்(Kamarajar). குழந்தைகளுக்கு இலவசக் கல்வி தந்ததோடு அவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக ’கல்வித் தந்தை’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

கருப்பு காந்தி காமராஜர் :

காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் கருப்பு காந்தி(Karuppu Gandhi), படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர்(Perunthalaivar Kamarajar) என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், 1976ல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கிச் சிறப்பித்தது.

மேலும் படிக்க : இளைஞர்கள் கையில் இந்தியாவின் எதிர்காலம் : பிரதமர் மோடி பெருமிதம்

காமராஜர் பிறந்தநாள் விழா :

கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா(Kamarajar Birthday 2025) இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தனது சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி(PM Modi), 'காமராஜ் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்''.

பிரதமர் மோடி வாழ்த்து :

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்” இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து(PM Modi Wishes Kamarajar) தெரிவித்துள்ளார்.

=======