பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
Anbumani Ramadoss Released PMK Election Manifesto 2026 : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
அதிமுக, தேசிய கூட்டணியில் பாமக
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாமக வேட்பாளர் பட்டியல்
18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாமக அறிவித்த நிலையில் தற்போது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
பாமக தேர்தல் அறிக்கை
அதன்படி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்கள்:
மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் புத்தகைப்பை இல்லாத கல்வி முறையானது அமல்படுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 40000 ஆசிரியர்கள் உடனடி நியமனம் செய்யப்படுவார்கள்.
பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
1கோடியே 30 லட்சம் படித்த இளைஞர்களில் முதற்கட்டமாக 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கபடும்.
மின்வாரியம், மருத்துவம் உட்பட தனியார் துறை வாயிலாக ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறைகளில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால கடன்கள், மத்திய கால பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இயற்கை வேளாண்மை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாருக்கு மணி மண்டபம் கட்டப்படும்.
சென்னையில் பிரம்மாண்டமான வகையில் தமிழிசை அரங்கம் அமைக்கப்பட்டு, ‘தமிழிசை விழா’ நடத்தப்படும்.
போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் கொடுக்கும் நபருக்கு சன்மானமாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது