PMK Founder Dr. Ramadoss said that he will announce an alliance with Dravidian party by Saturday Source : Google
தமிழ்நாடு

“திராவிட கட்சியோடுதான் கூட்டணி” : சனிக்கிழமைக்குள் அறிவிப்பு, பாமக நிறுவனர் ராமதாஸ்!

PMK Founder Ramadoss Alliance with DMK : திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி, சனிக்கிழமைக்குள் அறிவிப்பேன் என்று, டாக்டர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரம்

PMK Founder Ramadoss Alliance with DMK : தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முக்கிய கட்டத்தில் தொகுதி பேச்சுவார்த்தை

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை இறுதிப்படுத்தி விட்ட நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வந்துள்ளார். கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன.

இதனால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி முடிவுகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றன.

கூட்டணியை தக்கவைக்க தீவிரம்

திமுக தனது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக், மமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக தனது தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்துள்ளது.

தவெக தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பாமகவில் உட்கட்சி மோதல்

பாமகவில் உட்கட்சி பிரச்னை காரணமாக கட்சி இரண்டாக பிரிந்த நிலை உள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான ஒரு பிரிவு அதிமுக கூட்டணியில் இணைந்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது பாமகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை பிரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் ஆலோசனை

ராமதாஸ் தரப்பு இதுவரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை.ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்தநிலையில், பாமக மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

பிப். 28க்குள் கூட்டணி

அப்போது பேசிய ராமதாஸ், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு ராமதாஸ் தரப்பு பாமகவின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திராவிட கட்சியோடுதான் கூட்டணி

“திராவிட கட்சிகளோடுதான் கூட்டணி” என்று ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்தார். இதன்மூலம் பாஜக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று அவர் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்.

திருப்பத்தை தருவாரா ராமதாஸ்

இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அப்படி என்றால், திமுக கூட்டணிக்கு ராமதாஸ் வருகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி நடந்தால், விசிக என்ன முடிவினை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

====