PMK leader Anbumani accused DMK government achieving record,corrupting poor families by providing alcohol Source : Anbumani Ramadoss X(Twitter)
தமிழ்நாடு

“மதுவை கொடுத்து சீரழிப்பதில் திமுக அரசு சாதனை” : அன்புமணி காட்டம்

Anbumani accused DMK Government on TAMAC: மதுவைக் கொடுத்து ஏழைக் குடும்பங்களைச் சீரழிப்பதில் மட்டும் தான் திமுக அரசு சாதனை மேல் சாதனை செய்து வருகிறது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Kannan

மது விற்பனையில் சாதனை

Anbumani Ramadoss accused DMK Government on TAMAC : தமிழகத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி நான்கு நாட்கள் மதுவிற்பனை களை கட்டியது. 850 கோடி அளவுக்கு மது விற்பனை ஆகி இருக்கிறது.

ரூ.850 கோடிக்கு விற்பனை

இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், ”தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 14, 15, 17, 18 ஆகிய நாள்களில் மொத்தம் ரூ.850 கோடிக்கு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தோல்வியடைந்து விட்ட திமுக அரசு

ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துதில் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, மதுவைக் கொடுத்து ஏழைக் குடும்பங்களைச் சீரழிப்பதில் மட்டும் தான் அருவருக்கத்தக்க சாதனை மேல் சாதனை செய்து வருகிறது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு விற்பனை ரூ.710 கோடி

கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின் போது, ரூ.710 கோடிக்கு மது வணிகம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ரூ.140 கோடிக்கு அதிக மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட 20% அதிகம் ஆகும்.

மது விற்பனை கணிசமாக அதிகரிப்பு

மது விற்பனை ஓராண்டில் 20% அதிகரிப்பு என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமல்ல. சமூக சீரழிவின் அடையாளமாகவே இதை பார்க்க முடியும்.

மதுவிலக்கே ஒரே தீர்வு

இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவது தான். அதை பாமக விரைவில் சாத்தியமாக்கும்” என்று அந்தப் பதிவில் அன்புமணி கூறியுள்ளார்.

=======