PMK leader Anbumani alleged corruption cannot be hidden by erecting tarpaulin over L-shaped flyover in Madhya Kailash google
தமிழ்நாடு

தரமற்ற முறையில் கட்டப்பட்ட மத்திய கைலாஷ் மேம்பாலம்? தார் பூசி மறைக்க முடியாது’’ - அன்புமணி காட்டம்

Anbumani on Madhya Kailash Flyover Issue : புதிதாக கட்டப்பட்ட L வடிவ மேம்பாலம் மீது தற்போது தார்சாலை அமைத்து ஊழலை மறைக்க முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Rohini

புதிய மேம்பாலம்

Anbumani on Madhya Kailash Flyover Issue : சென்னை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது .

நெடுநாளாக கடும் வாகன நெரிசலானது இப்பகுதியில் ஏற்பட்ட நிலையில் இப்புதிய மேம்பாலம் சற்று நிம்மதியை அளித்திருந்தது.

L' பாலத்தின் நவீன வடிவமைப்பு

68 கோடி ரூபாய் செலவில், 'L' வடிவில் இருவழித் தட அகலத்துடன் ஒருவழிப் போக்குவரத்திற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணுகு சாலை உட்பட இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டர் ஆகும்.

சர்தார் பட்டேல் சாலையிலிருந்து திரும்பும் வளைவானது 45 மீட்டர் ஆரம் (Radius) கொண்ட நேர்த்தியான வளைவாக அமைக்கப்பட்டுள்ளது.

தார் போட்டு ஊழலை மறைக்க முடியாது

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி தொடர்ந்து ,சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலம் தரமற்றும், பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில் , இப்போது மேம்பாலத்தின் மீது அவசர, அவசரமாக தார்ச்சாலை அமைத்திருக்கிறது.

உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டைச் சீரழித்த திமுக கம்பெனி தான் என்றும் இத்தகைய தார்பூச்சு வேலைகளின் மூலம் பாலம் கட்டுவதில் நடந்த ஊழலை மூடி மறைக்க முடியாது என்றும் சாடியுள்ளார்.

மேலும் படிக்க :மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் திறப்பு : சிறப்பம்சங்கள்

தற்போது ஏற்பட்டுள்ள குற்றசாட்டுகள்

கடந்த 18-ஆம் தேதி அந்த மேம்பாலத்தில் பயணம் செய்த போது, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களைத் தூக்கிப் போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினேன் என்றும் அந்த குற்றச்சாட்டை நான் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த சென்னை மக்களுமே ஒப்பு கொள்ளவர்கள் என குறிப்பிட்டார்.

மேலும் எல் வளைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளைவானது மிகவும் குறுகலாக இருப்பதால், இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் தடுமாறி கீழே விழும் நிலை இருப்பதாக வாகன ஓட்டிகள் பலரும் குற்றம் சாட்டினார் என்றும் குறிப்பிட்டார் .

இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பாலத்தைத் தவிர்த்துவிட்டு கீழே சாலை வழியாகவே செல்வதால், இந்தப் பாலத்தின் நோக்கமே படுதோல்வி அடைந்து விட்டதாக வல்லுனர்களும் கூறுவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க :தரமற்ற முறையில் கட்டப்பட்ட மத்திய கைலாஷ் மேம்பாலம்? : அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் அன்புமணி

ஊழல் குறித்து ஏற்கனவே குற்றம்சாட்டிருந்த அன்புமணி

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஊழல் தலைவிரித்தாடுகிறது குறிப்பாக

திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்டச் சாலைப் பணியை ரூ.700 கோடி குறைவாகச் செய்ய முன்வந்த நிறுவனத்தை நிராகரித்து மறுத்துவிட்டு ரூ.2,100 கோடியில் செய்வதாகக் கூறிய நிறுவனத்திற்கு திமுக அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று குற்றம்சாட்டினார்.