மக்களை சந்திக்கும் அன்புமணி :
Anbumani on DMK Government : "உரிமை மீட்க… தலைமுறை காக்க” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நடைப் பயணம் மேற்கொண்டு இருக்கும் பாமக செயல் தலைவர் அன்புமணி, ஆங்காங்கே மக்களை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில்,
கணக்கு காட்டி ஏமாற்றும் திமுக :
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சிப்காட்டில் பொதுமக்களிடையே பேசிய அவர், “சிப்காட்டில் குரோமிய கழிவுகளால் நிலத்தடி நீர் பாதித்து, புற்றுநோய், இருதய கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது. குரோமியத்தை தற்காலிகமாக அகற்ற, 15 கோடி ரூபாய் ஒதுக்கியதாக, திமுக அரசு கணக்கு காட்டி ஏமாற்றி விட்டது. முழு குரோமிய கழிவுகளையும் அகற்ற, 700 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்; பசுமைத் தீர்ப்பாய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
பாமக நடைப்பயணம், மக்கள் ஆதரவு :
'தமிழகத்தை மீட்டெடுப்போம், திராவிட மாடலுக்கு விடை கொடுப்போம்' என்ற எனது பயணத்தை தமிழக பெண்கள் ஏற்று கொள்வர். மகளை பள்ளிக்கு அனுப்பினால் பத்திரமாக வீடு திரும்புவாரா என்ற பயத்தில் பெற்றோர் உள்ளனர். நான்கு வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும் படிக்க : Anbumani : மு.க.ஸ்டாலின் மன்னிப்புக்கேட்க வேண்டும் : அன்புமணி
திமுகவுக்கு பெண்கள் வாக்களிக்க கூடாது :
தமிழக பெண்கள் வரும் சட்டசபை தேர்தலில், திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது. கடந்த தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள். தமிழகத்துக்கு மாற்றம் வர வேண்டும்” இவ்வாறு அன்புமணி(Anbumani) உரையாற்றினார்.
=====