L வடிவ மேம்பாலம்
Anbumani Ramadoss slams DMK : சென்னை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையை இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது .
நெடுநாளாக கடும் வாகன நெரிசலானது இப்பகுதியில் ஏற்பட்ட நிலையில் இப்புதிய மேம்பாலம் சற்று நிம்மதியை அளித்திருந்தது.
L' பாலத்தின் நவீன வடிவமைப்பு
68 கோடி ரூபாய் செலவில், 'L' வடிவில் இருவழித் தட அகலத்துடன் ஒருவழிப் போக்குவரத்திற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அணுகு சாலை உட்பட இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டர் ஆகும்.
சர்தார் பட்டேல் சாலையிலிருந்து திரும்பும் வளைவானது 45 மீட்டர் ஆரம் (Radius) கொண்ட நேர்த்தியான வளைவாக அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள குற்றசாட்டுகள்
கடந்த 18-ஆம் தேதி அந்த மேம்பாலத்தில் பயணம் செய்த போது, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களைத் தூக்கிப் போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினேன் என்றும் அந்த குற்றச்சாட்டை நான் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த சென்னை மக்களுமே ஒப்பு கொள்ளவர்கள் என குறிப்பிட்டார்.
மேலும் எல் வளைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளைவானது மிகவும் குறுகலாக இருப்பதால், இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் தடுமாறி கீழே விழும் நிலை இருப்பதாக வாகன ஓட்டிகள் பலரும் குற்றம் சாட்டினார் என்றும் குறிப்பிட்டார் .
இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பாலத்தைத் தவிர்த்துவிட்டு கீழே சாலை வழியாகவே செல்வதால், இந்தப் பாலத்தின் நோக்கமே படுதோல்வி அடைந்து விட்டதாக வல்லுனர்களும் கூறுவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க :மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் திறப்பு : சிறப்பம்சங்கள்
ஊழல் குறித்து குற்றம்சாட்டிய அன்புமணி
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஊழல் தலைவிரித்தாடுகிறது குறிப்பாக
திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்டச் சாலைப் பணியை ரூ.700 கோடி குறைவாகச் செய்ய முன்வந்த நிறுவனத்தை நிராகரித்து மறுத்துவிட்டு ரூ.2,100 கோடியில் செய்வதாகக் கூறிய நிறுவனத்திற்கு திமுக அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.