PMK Leader Anbumani Ramadoss on Caste Wise Census in Tamil Nadu 
தமிழ்நாடு

"சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் இல்லை": திமுகவுக்கு புரிகிறதா?

Anbumani on Caste Wise Census : சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் கிடையாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக ஆட்சியாளர்களுக்கு இது புரியுமா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Kannan

சாதிவாரி கணக்கெடுப்பு - தடை விதிக்க மறுப்பு :

Anbumani on Caste Wise Census : இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கர்நாடகத்தில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க அம்மாநில உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். சமூகநீதியைக் காக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு :

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டும் தான் மேற்கொள்ள முடியும், மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லாததால் கர்நாடக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடரப்பட்டது.

தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு :

வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கர்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க எந்த காரணமும் இல்லை என்றும், கணக்கெடுப்புப் பணிகள் தொடரலாம் என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு மாநிலத்தின் உரிமை :

பாட்டாளி மக்கள் கட்சியும் இதையே தான் கூறி வருகிறது. பிகார் உயர் நீதிமன்றமும் இதே நிலைப்பாட்டைத் தான் மேற்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மாநில அரசின் உரிமை. சமூகநீதியை பாதுகாக்க அது அவசியம் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சமூக நீதி புரியாத திமுக அரசு :

அதன் பயன் தான் இதுவரை 4 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு(Castewise Population) நடத்தி முடிக்கப்பட்டிருப்பதும், பல மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதும் ஆகும். ஆனால், தமிழகத்தை ஆள்பவர்களுக்கு மட்டும் தான் சமூகநீதியும் புரியவில்லை; சாதிவாரி கணக்கெடுப்பின் தேவையும் தெரியவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க : தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் அன்புமணி!

சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துக :

கர்நாடக உயர்நீதிமன்றத்(Karnataka High Court) தீர்ப்புக்குப் பிறகாவது அவர்களுக்கு தெளிவு பிறக்க வேண்டும். இதற்குப் பிறகும் குழப்பம் இருந்தால் அரசுத் தலைமை வழக்கறிஞர் வாயிலாக உயர்நீதிமன்றத்திடம் கூட விளக்கம் பெற்றுக்கொண்டாவது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு முன்வர வேண்டும்”. இவ்வாறு அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

=============