பாமகவின் மாநில இளைஞர் அணி பொதுக்குழு கூட்டம்
Anbumani slams DMK Government in PMK Youth Wing Meeting : பாமகவின் தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அன்புமணி தான் பாமக தலைவர்
இந்த வழக்கில் ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அன்புமணி தரப்பில் பாமகவின் மாநில இளைஞர் அணி பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.
அன்புமணி ராமதாஸ் உரை
கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் இளைஞர்கள் உங்களை நம்பி தான் நம் கட்சி இருக்கிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும்.
குழப்பங்கள் உங்களுக்கு தெரியும்
நம் கட்சிக்குள் உள்ள குழப்பங்கள் எல்லாம் உங்களுக்கும் தெரியும். யாரால் நடக்கிறது என்றும் உங்களுக்கு தெரியும். திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்.
திமுகவை விரட்டி அடிப்போம்
இனி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறக்கூடாது. அதனால் தான் நான்கு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் நடத்தினேன்.
பாமக மீது இளைஞர்கள் நம்பிக்கை
அப்போது நான் திமுக செய்த ஊழல்களைப் பற்றி மக்களுக்கு எடுத்து சொன்னேன். திமுக பணத்தை மட்டுமே நம்பி உள்ளது,
ஆனால் பாமகவிற்கு இளைஞர்களுடைய நம்பிக்கை உள்ளது. தேசிய கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.
ராமதாஸை சுற்றி துரோகிகள்
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ஜி.கே. மணி மீது குற்றச்சாட்டு
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளதாகவும், அதில் முக்கியமான துரோகி ஜிகே மணி என்றும் அன்புமணி பேசியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.
ஒரே குறிக்கோள் திமுகவை வீழ்த்துவது தான்
மேலும் பேசிய அவர், ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளனர். ராமதாஸிடம் பொய் பொய்யாகக் கூறி அவரது மனதை மாற்றுகின்றனர்.
பொய்யான தகவல்களைச் சொல்கின்றனர். நேற்று கூட மாம்பழம் சின்னம் நமக்குதான் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதைப் பற்றியும் ராமதாஸிடம் பொய்யாகத் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸை சுற்றியுள்ள துரோகிகளில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி. இதைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது, பின்னர் கூறுகிறேன். இந்தக் கூட்டத்தில் அவரைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியை ஜி.கே.மணி இழந்துவிட்டார்.
திமுகவால் பாமகவில் குழப்பம்
நமக்குள் விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நமக்கு ஒரே எதிரி திமுகதான். சூழ்ச்சியினால் தான் இந்த குழப்பங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
நமக்குள் குழப்பத்தை திமுகவினர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இங்கேயும், அங்கேயும் கொழுத்திப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். குழப்பம் ஏற்படுத்துவதில் திமுகவினர் பிஎச்டி படித்துள்ளனர்.
எப்படி குழப்பம் ஏற்படுத்த வேண்டும். யாரைப் பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துவது என்று செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், நம்முடைய ஒரே குறிக்கோள் திமுகவை வீழ்த்துவது தான் என்று தெரிவித்துள்ளார்.