Ramadoss Daughter Srikanthi Position in PMK Executive Committee Member 
தமிழ்நாடு

PMK: பாமக நிர்வாக குழுவில் ’ராமதாஸ் மகள்’ : அன்புமணிக்கு நெருக்கடி

Ramadoss Daughter Srikanthi Position in PMK : அன்புமணிக்கு செக் வைக்கும் வகையில் பாமக தலைமை நிர்வாக குழுவில் தனது மகள் ஸ்ரீகாந்தியை சேர்த்து இருக்கிறார் ராமதாஸ்.

Kannan

பாமகவில் ஓயாத பஞ்சாயத்து :

Ramadoss Daughter Srikanthi Position in PMK : பாட்டாளி மக்கள் கட்சியில் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. தனித்தனி பொதுக்குழுவை நடத்தி ராமதாசும், அன்புமணியும் மல்லுக்கட்டி நிற்கிறார்கள். தனது அனுமதியின்றி பொதுக்குழுவை அன்புமணி கூட்டியதாக, நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். உரிய விளக்கம் அளிக்க ஆகஸ்டு 31வரை அவருக்கு கெடு வழங்கப்பட்டு இருக்கிறது.

ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி :

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி(Ramadoss Daughter Srikanthi) கலந்து கொண்டார். அப்போதே, அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம், அன்புமணிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ராமதாஸ் இதை செய்யப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது.

பாமக நிர்வாக குழுவில் உறுப்பினர் பதவி :

இந்தநிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில், ஸ்ரீகாந்தி(Srikanthi) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பாமகவில் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், பாமகவின் எதிர்கால திட்டங்களில், முடிவெடுக்கும் குழுவிலும் அவர் முக்கியப் பங்கு வகிப்பார் என்பது புரிகிறது.

பாமகவில் புதிய தலைமையா? :

ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்திக்கு(Srigandhi Ramadoss) இந்த புதிய பொறுப்பை வழங்கியதன் மூலம் அடுத்த தலைமையை உருவாக்குகிறாரோ என்ற பேச்சு எழுந்துளது. ஸ்ரீகாந்தியின் வருகை, கட்சியில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று நிர்வாகிகள் கூறுகின்றனர். ராமதாஸ் எதிர்கால தலைமையை உருவாக்குவாரா? அன்புமணியுடன் சமரசம் ஏற்பட்டு அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவார்களா? என்பது ஆகஸ்டு 31க்கு பிறகு தெரிய வரும்.

மேலும் படிக்க : PMK : அன்புமணிக்கு எதிராக நோட்டீஸ் : சாட்டையை சுழற்றும் ராமதாஸ்

நிர்வாகக் குழுவில் 21 பேர் :

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவில்(PMK Executive Members) தற்போது 21 உறுப்பினர்கள் உள்ளனர். ஸ்ரீகாந்தியின் வருகை நிர்வாக குழு அவரது வழிகாட்டுதலில் நடைபெறும் சூழலை உருவாக்கி இருக்கிறது. கட்சியின் பொதுவான செயல்பாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட அணுகுமுறையில் செயல்படும் அன்புமணி, இனி என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி பாமக தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது.

=============