PMK Mango Symbol Issue Case Based on documents, PMK leader Anbumani is Right to Symbol and Party Election Commission explains News in Tamil Source : PMK
தமிழ்நாடு

அன்புமணிக்கே ’பாமக, மாம்பழம்’ : ராமதாசுக்கு மீண்டும் பின்னடைவு

PMK Mango Symbol Issue Case : ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது .

Rohini

தொடர் மோதல்

Ramadoss vs Anbumani, PMK Mango Symbol Issue Case : பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனான பாமகவின் தலைவருமான அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்த நிலையில், கட்சி யாருக்கு சொந்தம் எனும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதனால் பாமக இரண்டாக பிளவுப்பட்டு நிற்கிறது.

கட்சி சின்னம் யாருக்கு

இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டுவது, கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்களை நியமிப்பது, நீக்குவது உள்ளிட்ட விவகாரங்களில் தனித்தனியாக ஈடுபட்டு வந்தனர் அதனடிப்படையில் கட்சி சின்னம் யாருக்கு சொந்தம் என்ற சூழலும் நிலவி வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

அன்புமணிக்கே பா.ம.க

தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்த சூழலில் யாருக்கு சின்னம் என தந்தை மகன் இருவரும் காத்திருந்த நிலையில் அக்கட்சி அன்புமணிக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம், அன்புமணி தலைமையில் இயங்கும் பாமக அலுவலக முகவரிக்கு கடிதம் அனுப்பியது . இதனையடுத்து தேர்தல் ஆணையம், அன்பு மணிக்குத்தான் பாமக என உறுதியளித்துள்ளது .

ராமதாஸ் தரப்பு வாதம்

இதற்கிடையில் தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தரப்பு மோசடி செய்ததாக ராமதாஸ் தரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது .

இதை ஏற்க மறுக்கும் தரப்பினர் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று வந்தால் மட்டும் தான் மாற்றங்களை செய்ய முடியும் என கூறிய வாதத்தை இன்று டெல்லி உயர்நீதிமன்றம் பதிவு செய்து மனுவை முடித்து வைத்தது.

இதைத்தொடர்ந்து, பாமகவும், மாம்பழ சின்னமும் அன்புமணிக்கே என்பது உறுதியாகி விட்டது. இது ராமதாஸ் தரப்பிற்கு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமதாசுக்கு பின்னடைவு

எந்தக் கூட்டணிக்கும் செல்லாமல் தனித்து நிற்கும் ராமதாஸ், அடுத்தகட்டமா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

==================