Poet Song Writer Poovai Senguttuvan Passed Away News in Tamil 
தமிழ்நாடு

நான்கு முதல்வர்களுக்கு பாடல்கள் : பக்தியில் சிகரம் தொட்ட கவிஞர்

Poet Song Writer Poovai Senguttuvan Passed Away : நான்கு முதலமைச்சர்களுக்கு திரைப்பட பாடல்கள் எழுதிய பூவை செங்குட்டுவன் வயது மூப்பு காரணமாக காலமானார்.

Kannan

பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் :

Poet Song Writer Poovai Senguttuvan Passed Away in Tamil : பக்தி, காதல், கொள்கை என அனைத்து விதமான பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன். அவருக்கு வயது 90. சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவரது பெயர் முருகவேல் காந்தி.

பக்தி பாடல்களில் காவியம் படைத்தவர் :

’சேரன் செங்குட்டுவன்’ நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். தான் பிறந்த கிராமத்தின் பெயரையும் சேர்ந்து பூவை செங்குட்டுவன் என அனைவராலும் அழைக்கப்பட்டார்(Poovai Senguttuvan Biography in Tamil). 1967 முதல் தமிழ் திரைப்படங்களில் பாடல்களை எழுதிய, பக்திப் பாடல்கள் மூலம் காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர்.

எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்ட பூவை செங்குட்டுவன் :

தமிழ் சினிமாவில், எம்ஜிஆரும் - கண்ணதாசனும் நேர் எதிர் துருவங்களாக பயணித்த போது, புதிய பூமி படத்தில் கொள்கை பாடலை எழுதினார் பூவை செங்குட்டுவன். இதன்மூலம் எம்ஜிஆரை வியக்க வைத்த அவர், ” நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், ஏடு தந்தானடி தில்லையிலே போன்ற பாடல்களால் அழியா புகழை பெற்றார். இவரது பாடல்கள் பட்டி தொட்டிகள் மட்டுமின்றி, கோவில்களிலும் ஒலித்து பெருமை சேர்த்தன.

நான்கு முதல்வர்களுக்கு பாடல்கள் :

தமிழ் திரையுலகில் எந்த பாடலாசிரியருக்கும் கிடைக்காத சிறப்பு பூவை செங்குட்டுவனுக்கு கிடைத்தது. ஆம், நான்கு முதல்வர்களுக்கு பாடல் எழுதிய ஒரே பாடலாசிரியர் இவர் மட்டும்தான். அண்ணா, கருணாநிதி,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அரசியல் கொள்கை பாடல்களை பூவை செங்குட்டுவன்(Poovai Senguttuvan Songs for 4 CMs) எழுதியிருக்கிறார்.

தேடி வந்த விருதுகள் :

அவரை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. மேலும் கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, பாரதியார் விருதுகளும் பூவை செங்குட்டுவன்(Poovai Senguttavan Awards) வழங்கப்பட்டன.

மேலும் படிக்க : MK Muthu Death : கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்

காற்றில் கரைந்த செங்குட்டுவன் :

சென்னையில் வசித்து வந்த பூவை செங்குட்டுவன்(Poovai Senguttuvan Death), வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 90. இவரின் மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

===========