Police arrive instantly upon sending a WhatsApp message: Tambaram Police's impressive AI service! source: ai generated
தமிழ்நாடு

WhatsApp-ல் ஒரு Message.. விரைந்து வரும் காவல்துறையினர் : தாம்பரம் காவல்துறையின் அசத்தல் ஏஐ சேவை!

தாம்பரம் காவல்துறையின் வாட்ஸ்அப் ஏஐ சேவை மூலம் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கலாம்; பெண்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு வசதி.

Kavitha prasanna

காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், தாம்பரம் காவல்துறை வாட்ஸ்அப் மூலம் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய சேவையை அறிமுகப்படுத்தித் தமிழகத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.

ஒரே மெசேஜில் காவல் சேவை

பொதுமக்கள் காவல் நிலையத்திற்குப் பலமுறை நேரில் செல்வதைத் தவிர்க்க, வீட்டி லிருந்தபடியே செல்போன் மூலம் ஒரே நிமிடத்தில் உதவி பெறலாம்.

பொதுமக்கள் '93442 22100' என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு 'Hi' என்று மெசேஜ் அனுப்பினால், உடனடியாகத் தாம்பரம் காவல்துறை அவர்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கும்.

இச்சேவையைத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெற முடியும்.

ரகசியத் தகவல் மற்றும் புகைப்படங்கள் பகிர்வு

போதைப்பொருள் விற்பனை, சந்தேக நபர்களின் நடமாட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாகப் புகார் அளிக்கலாம்.

விரைவான நடவடிக்கை

குற்றச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சம்பவ இடத்தின் இருப்பிடத்தை வாட்ஸ்அப்பில் உடனடியாகப் பகிர்வதன் மூலம், போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பர்.

பெண்களுக்கு இரவு நேரப் பயணப் பாதுகாப்பு

இரவு நேரங்களில் தனியாகப் பயணிக்கும் பெண்கள் தங்களது பயண விவரங்களை இந்த வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.

லைவ் லொகேஷன் உதவி

ஆபத்தான சூழலில் 'லைவ் லொகேஷன்' மூலம் சில நொடிகளிலேயே அருகில் உள்ள ரோந்துப் படையினரின் உதவியைப் பெற முடியும்.

பயனுள்ள பரிந்துரை

தாம்பரம் காவல்துறையின் இந்த நவீன வாட்ஸ்அப் சேவை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால், குற்றங்கள் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : ”எரிசக்தி பாதுகாப்பே முக்கியம்” ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தப் போவதில்லை : மத்திய அரசு திட்டவட்டம்.!

=====