Police lock disabled people in bus for 14 hours for protest against DMK Government in Chennai Commissioner Office google
தமிழ்நாடு

14 மணி நேரம் பேருந்தில் அடைப்பு : மாற்றுத் திறனாளிகள் வேதனை

Disable People Protest in Chennai Commissioner Office : உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Rohini

காத்திருப்பு போராட்டம்

Disable People Protest in Chennai Commissioner Office : பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், 'டெட்' ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்களை குறைக்க வேண்டும், உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது .

வேதனை கருத்து

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாகக் கூறி, இரவு முதல், தொடர்ந்து 14 மணி நேரம் பஸ்சில் அடைத்து வைத்து எந்த காரணமும் கூறாமல் இருந்ததாக மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பாதிக்கபட்டவர்கள் கூறியது

சென்னையில் காலையில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்; இரவு காமராஜர் சாலையில் உள்ள ஆணையரக வளாகத்தில் தங்க வைக்க பட்டோம்.

பின்பு இரவு, 10:00 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக கூறி, எங்களை கைது செய்து, பஸ்சில் ஏற்றினர். நாங்கள் 44 பேர் இருந்தோம்.

14 மணி நேரம் பேருந்தில் அடைப்பு

ஆனால் நீதிமன்றம் செல்லாமல் கோயம்பேடு பஸ் நிலையம் சென்றனர். பின், போரூர் டோல்கேட் சென்று, அங்கேயே பஸ்சை நிறுத்தி, எங்களை உள்ளுக்குள் அடைத்தது காவல் துறை

அடைத்து வைத்து மிரட்டலா

போரட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் நான்கு பேரை சிறுநீர் கழிக்க கூட அனுமதிக்கவில்லை. 14 மணி நேரம் பஸ்சில் தவித்தோம்.

பின் மதியம் 1:00 மணிக்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே விடுவித்தனர்; 'மீண்டும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது' என, மிரட்டினர்.என தாங்கள் சந்தித்ததை மன வேதனையுடன் கூறினார்கள் .

==============