Pondicherry CM Rangaswamy Announcement Of Magalir Uthavi Thogai 1000 for BPL Ration Card 
தமிழ்நாடு

புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத்தொகை : ரூ.1,000 வழங்க உத்தரவு

CM Rangaswamy on Magalir Uthavi Thogai Rs 1000 : புதுச்சேரி மாநிலத்திலும் விரைவில் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Kannan

அண்டை மாநிலம் புதுச்சேரி :

CM Rangaswamy on Magalir Uthavi Thogai Rs 1000 : அண்டை மாநிலமான புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் அரசு ஆட்சிப்பொறுப்பில் உள்ளது. தனிமாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி அரசு தொடர்ந்து போராடி வருகிறது. தவளகுப்பம் பகுதியில் ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவிலேயே முதன்முறையாக யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தான், ஆதி திராவிட, பழங்குடி மக்களுக்கு 800 சதர அடி நிலம் வீடு கட்டி கொள்ள வழங்கப்படுகிறது. அதன்படி, இவவச மனைப் பட்டாக்களை வழங்கிய முதல்வர் ரங்கசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மகளிருக்கு ரூ.1,000 நிதியுவி :

”புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்(Puducherry Women Aid Scheme). தமிழகத்தை போலவே புதுவையிலும், பெண்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை கிடைக்கும்” என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஆட்சியை பிடிக்க வியூகம் :

தமிழகத்தில் இந்தத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்துப்பட்டு பெரும்பாலான மகளிருக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகத்து. தமிழ்நாட்டோடு சேர்ந்து அடுத்த ஆண்டு புதுச்சேரிக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, புதிய சலுகை திட்டங்களை முதல்வர் ரங்கசாமி அறிவித்து வருகிறார். பாஜக ஆதரவோடு செயல்பட்டு வரும் தனது அரசை, அடுத்த முறையும் ஆட்சி அமரச் செய்யும் முனைப்போடு ரங்கசாமி செயல்பட்டு வருகிறார்.

==========