Ponmudi Controversy Speech, Court Warn https://x.com/KPonmudi
தமிழ்நாடு

பொன்முடியின் ஆபாச பேச்சு:காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆபாச பேச்சு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய காவல்துறை தயங்கினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Kannan

பொன்முடியின் ஆபாச பேச்சு :

இந்து மதத்தையும், பெண்களையும் அமைச்சராக இருந்த போது பொன்முடி ஆபாசமாக பேசியது, தமிழகம் முழுவதும் எதிர்ப்பை கிளப்பியது. இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். வேறு வழியின்றி திமுக தலைமை இந்த முடிவினை எடுக்க நேர்ந்தது

பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ''தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது'' என விளக்கம் அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் கருத்து :

இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும். அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்.

காவல்துறைக்கு எச்சரிக்கை :

ஆபாச பேச்சு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய காவல்துறையினர் தயங்க கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை உருவானால், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும். இவ்வாறு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

=====