மெட்ரோ ரயில் சேவை
Poonamallee To Porur Metro Service : போக்குவரத்து தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப சேவைகளும் அவசியமாகின்றன. அந்த வகையில், பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை சிறப்பான, விரைவான போக்குவரத்தை வழங்கி வருகிறது. நாள்தோறும் லட்சக் கணக்கானோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
போரூர் - பூந்தமல்லி சேவை
சென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில், முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான 9 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் முழுமையாக றைவடைந்துள்ளன.
அடுத்த மாதம் ரயில் சேவை
இந்த வழித்தடத்தில் மெட்ரோ சேவை அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிமகா உள்ள போரூர், ஐயப்பன்தாங்கல், குமணன்சாவடி, கரையான்சாவடி உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வருவதால் தங்கள் பயணம் இனி எளிமையாகும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஓட்டுனர் இல்லாத ரயில்கள் இயக்கம்
பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவையில் 13 ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் சேவையும் இதில் கொண்டு வரப்படவுள்ளது. முதல் 6 மாதங்கள் லோகோ பைலட்டுகள் ரயில் பெட்டியில் இருந்து போக்குவரத்தை கண்காணிப்பர்.
பயணிகளுக்கு முழு பாதுகாப்பு
இந்த வழித்தட நிலையங்களில் அரை உயர மேடை திரை கதவுகள் (Half-height Platform Screen Doors) அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், உயர்த்தப்பட்ட (Elevated) வழித்தடங்களில் இத்தகைய பாதுகாப்பு தடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை பயணிகளின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும்.
====