Poonamalleeto Vadapalani Yellow Line Metro to be launched amidst high expectations  google
தமிழ்நாடு

மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ : மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் இயக்கம்! : குதூகலத்தில் பயணிகள்..

நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு இடையே பூந்தமல்லி முதல் வடபழனி மெட்ரோ ஒருவழியாக மக்களின் பயன்பாட்டிற்கு வருக்கிறது

Rohini

மக்கள் பயன்பாட்டிற்கு வரும் மஞ்சள் வழித்தடம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டத்தில் உருவாகும் மஞ்சள் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை 15.8 கி.மீ. தூரத்திற்கு புதிய மெட்ரோ பாதை வேலைபாடுகள் நடந்து வந்த நிலையில் தற்போது அது நிறவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

இடம்பெறும் வழித்தட நிலையங்கள்

இந்த மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், போரூர் உள்ளிட்ட 11 நிலையங்கள் இடம்ப்ற்றுள்ளன. இது வழித்தடமானது மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றிருந்த நிலையில் , சேவையானது விரையில் வருகிறது

பயணிகளுக்கு சிரமம் குறையும்

இந்த புதிய மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால், பூந்தமல்லி முதல் வடபழனி வரை பயண நேரம் வெறும் 20 நிமிடங்களாக குறையும் . இதன் மூலம் போரூர் மற்றும் ஆற்காடு சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன்,

ஐடி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையத்திற்குச் மற்றும் இந்த சாலையயை பயன்படுத்துவர்களுக்கும் இது மிகுந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,

பயணிகளுக்கும் பெரும் பயனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீண்ட நாட்களாக இந்த வழித்தடம் போக்குவரத்து நெரிசலை சந்திது வந்தது குறிப்பிடத்தக்கது

உரிய ஆய்வுக்கு பின்னர் அனுமதி

சமீபத்தில் தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு இந்த பாதையில் ஆய்வு நடத்தி பின்னர், ரயில்களை முழுமையாக இயக்க இறுதி பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

40 கி.மீ வேகத்தில் இயக்க உத்தரவு

மக்களின் பயன்பாடிற்கு வரும் இந்த ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ.யிலிருந்து 40 கி.மீ. ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வேகத்தில் இயக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது

===========================