Praveen Chakraborty said that Vijay's TVK get more votes than ADMK, Congress has been weakened  Source : Google
தமிழ்நாடு

ADMK விட விஜய்க்கு ’அதிக வாக்குகள்’ : கூட்டணியால் பலவீனமான காங்...

தேர்தலில் அதிமுகவை விட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெறும், 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருப்பதால், தமிழக காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டதாக பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல்

Praveen Chakraborty said that Vijay's TVK get more votes than ADMK in TN Assemble Elections : சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தமிழகம் தன்னை தயார்படுத்தி வருகிறது. ஏப்ரல் கடைசியில் அல்லது மே முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளது.

வேகம் எடுக்கும் கூட்டணி பேச்சு

திமுகவும் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தையை சில நாட்களில் தொடங்குகிறது. இன்னும் சில தினங்களில் நடத்த உள்ளது. இந்த ஆலோசனையின் போது காங்கிரஸ் எழுப்பிய ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெகவுக்கு பிரகாசமான வாய்ப்பு

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை விட விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அதிக வாய்ப்புகளை நிச்சயமாக எடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியிருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயின் நண்பர் பிரவீன் சக்ரவர்த்தி

ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான இவருக்கு விஜயுடன்நல்ல நட்புடனும் உள்ளது. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே இவரின் நிலைப்பாடு. விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கிய போது, "சட்டசபைத் தேர்தலுக்கான விசில் அடித்தாயிற்று" என பிரவீன் சக்ரவர்த்தி ட்வீட் செய்தார்.

3வது அரசியல் சக்தி தவெக

இந்தநிலையில், ”தமிழ்நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தி தமிழக வெற்றிக் கழகம் தான். விஜயை மக்கள் அங்கீகரித்து விட்டனர். கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்டால் கூட தமிழக வெற்றிக் கழகம் வலுவாகவே உள்ளது.

தவெகவுக்கு 18% வாக்குகள்

தவெக தனித்துப் போட்டியிட்டாலும் கூட 18 சதவீதம் வாக்குகளைப் பெறும். இது கூடுமே தவிர, இனி குறைய வாய்ப்பில்லை.

அதிமுகவை முந்தும் விஜய்

தமிழ்நாட்டில் அதிமுகவை விஜய் பின்னுக்குத் தள்ளுவார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை விடத் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெறும்.

இளையோரிடம் விஜய்க்கு செல்வாக்கு

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வாக்கு விஜய்க்கு இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்.

காங்கிரஸ் பலவீனமாக உள்ளது

தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. அதற்கு காரணம் 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருப்பது தான். 18 சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு இருந்தாலும், தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் பலவீனப்பட்டு போய் விட்டது.

உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலும் இந்த நிலைதான்” இவ்வாறு பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்து இருக்கிறார்.

===================