Praveen Chakravarthy, while speaking to reporters in Coimbatore, stated that Vijay will become a major political force. google
தமிழ்நாடு

Congress : விஜய் மிகப்பெரிய ”அரசியல் சக்தி” : பிரவீன் சக்ரவர்த்தி!

Congress Praveen Chakravarty About TVK Vijay : தவெக தலைவர் விஜயை மக்கள் அரசியல்வாதியாகவே பார்க்க வருகிறார்கள் என அகில இந்திய காங்கிரஸ் டேட்டா பகுப்பாய்வு தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Baala Murugan

செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி

Congress Praveen Chakravarty About TVK Vijay : கோவையில் பிரவீன் சக்ரவர்த்தியிடம், விஜய் சந்திப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய் பேரணியில் பங்கேற்க மக்கள் உற்சாகமாக வருகிறார்கள். விஜய்யை ஒரு நடிகராக அவர்கள் பார்க்க வரவில்லை, அவரை அரசியல்வாதியாகவே பார்க்க வருகிறார்கள். விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறி உள்ளார், அதை யாராலும் மறுக்கவே முடியாது" என்றார்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை

"காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது இல்லை. அதிக சீட், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என்றும் காங்கிரஸ் பலவீனமாகவே போய்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை,இதைப் பலப்படுத்த நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுரை

ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இது தேவையா, இல்லையா என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும்.

காங்கிரஸ் ஜனநாயக ரீதியான கட்சி. தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது உண்மை என ஏற்கனவே கூறிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து தலைமை தான் முடிவெடுக்கும்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலனுக்காக தொண்டர்கள் இந்த கோரிக்கையை வைக்கின்றனர்", கூட்டணிப் பொருத்தவரையும் காங்கிரஸ் தலைமைதான் முடிவெடுக்கும் என்றும் பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களது கோரிக்கை வைக்கலாம் என்றும் அதனுடைய கடைசி முடிவு காங்கிரஸ் தலைமை தான் எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.