தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு :
உலக அளவில் முதலீட்டாளர்கள், தங்கத்தில் கூடுதலாக முதலீடு செய்து வருகின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அடுத்த மாதம் முகூர்த்த நாட்கள் இருப்பதால், விலையேற்றம் இருந்தாலும், நாள்தோறும் 15 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை ஆகி வருகிறது.
86,000 நெருங்கியது தங்கம் :
வாரத்தின் தொடக்க நாளான இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலையேற்றம் காரணமாக ஒரு சவரன் தங்கம் விலை 86 ஆயிரத்தை எட்டியது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரூ.93,376-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவன் ரூ.70,880-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் புதிய உச்சம் :
இதேபோல இன்று வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.1 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1,60,000-க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
====================