Prime Minister Modi, staying in Chennai tonight, holding consultations with senior TN BJP leaders google
தமிழ்நாடு

சென்னையில் பிரதமர் மோடி : பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை : அண்ணாமலையும் பங்கேற்கிறார்...

சென்னையில் இன்றிரவு தங்க இருக்கும் பிரதமர் மோடி, தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Kannan

பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

அண்ணாமலை போட்டியிடவில்லை

இதில், அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் போட்டியிட மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், புதுச்சேரியில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

புதுசேரியில் பிரதமர் ரோடு ஷோ

இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் மோடி, அஜந்தா சிக்னல் சந்​திப்பு, அண்ணா சாலை மற்றும் அண்ணா திடல் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ செல்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவும் உள்ளார்.

சென்னையில் மோடி ஆலோசனை

பின்னர் சென்னை திரும்பும் அவர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறார். அப்போது, தேர்தல் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்

அண்ணாமலை பங்கேற்பு

பிரதமர் உடனான ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலையும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. பாஜகவில் அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க இருப்பதால் தான், அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

வெற்றி வியூகம் - ஆலோசனை

இந்தமுறை இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக உள்ளது. அதற்கான வியூகங்கள், வெற்றி வாய்ப்புகள் பற்றி மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி விவாதிப்பார் எனக் கூறப்படுகிறது.

நாளை கேரளாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்.

மீண்டும் 15ம் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.  

===================