தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வியூகங்களை முடுக்கி விட்டு களமிறங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியும், மாநில மாநாடு, மண்டல மாநாடுகளை நடத்த முடிவு செய்துள்ளது.
பிரகதீஸ்வரர் கோவில் :
இந்தநிலையில், பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. மாமன்னர் ராஜேந்திர சோழன் இந்தக் கோவிலை கட்டினார். ஜூலை 27ம் தேதி, ஆடித் திருவாதிரை நட்சத்திர தினத்தில் அவரது பிறந்த நாள் வருகிறது. இந்நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும், என்று கடந்த 2021ல் உத்தரவிட்ட தமிழக அரசு தொடந்து இந்த விழாவை நடத்தி வருகிறது.
ஆடித் திருவாதிரை விழா :
இந்த ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்காக, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
=====