Prime Minister Modi, visiting Tamil Nadu today, offer prayers at Thiruparankundram, address NDA meeting in Madurai google
தமிழ்நாடு

”தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி” : திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் : மதுரை NDA கூட்டத்தில் சிறப்புரை

இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்து, மதுரையில் என்டிஏ கூட்டத்தில் உரைநிகழ்த்துகிறார்

Kannan

அனல் பறக்கும் தேர்தல் களம்

Prime Minister Narendra Modi, who is visiting Tamil Nadu today on a two-day visit, will offer prayers at Thiruparankundram and address an NDA meeting in Madurai : தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து, தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை நடத்தி முடித்து விட்டார். மார்ச் முதல் வாரத்தில் கூட தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

பிரதமர் மோடி தமிழகம் வருகை

திமுக, அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்து விட்டு, மக்களை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜகவும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறது.

இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுந நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

சென்னையில் தங்குகிறார் மோடி

டெல்லியில் இருந்து சென்னை வரும் அவர், இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அப்போது தமிழக பாஜக தலைவர்களை அழைத்து அவர் ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரி பயணம்

நாளை காலை புதுச்சேரி செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

புதுச்​சேரி சேத​ராப்​பட்​டில் 50 ஏக்​கரில் ரூ.1,100 கோடி​யில் ஜிப்​மர் மருத்​து​வ​மனை​யின் மேம்​பட்ட விபத்து சிகிச்சை மற்​றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் கட்டும் அறிவிப்பை பிரதமர் மோடி வெளி​யிடு​கிறார்.

பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்​பில், “புதுச்​சேரி​யில் ரூ.2,700 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்​கி வைக்​கும் பிரதமர், பல்​வேறு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மதுரை செல்லும் பிரதமர்

பின்​னர் ஹெலி​காப்​டரில் பிற்​பகல் 2.45 மணி​யள​வில் தஞ்​சாவூர் செல்​கிறார். அங்​கிருந்து விமானத்​தில் புறப்​பட்டு 3.30 மணி​யள​வில் மதுரை வரு​கிறார்.

விமான நிலைய வளாகத்​தில் வான் கட்​டுப்​பாட்டு கோபுரத்தை திறந்து வைக்​கும் பிரதமர், புதுப்​பிக்​கப்​பட்ட ரயில் நிலை​யங்​கள், பரமக்​குடி - ராம​நாத​புரம் நான்கு வழிச் சாலை திட்​டங்​களை காணொலி வாயி​லாகத் திறந்து வைக்​கிறார்.

திருப்பரங்குன்றத்தில் தரிசனம்

மாலை 4 மணி​யள​வில் திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​கிறார். தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம், நீதிமன்றம் தொடங்கி, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமரின் திருப்பரங்குன்றம் வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டத்தில் உரையாற்றுகிறார்

இதைத்தொடர்ந்து, மண்​டேலா நகரில் நடை​பெறும் தேசிய ஜனநாயக கூட்​டணி தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்​டோர் இந்தக் கூட்டத்தில் பங்​கேற்​கின்​றனர்.

7,000 போலீசார் பாதுகாப்பு

பொதுக்​கூட்​டம் முடிந்த பிறகு மதுரை விமானம் நிலை​யம் சென்​று, அங்கிருந்து டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி மதுரையில் 7 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்படுகின்றனர்.

=====================