“Prime Minister Modi will drive away the cockroach Janata Party with a ‘hit’” - Tamilisai  google
தமிழ்நாடு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் மோடி ‘ஹிட்’ கொண்டு விரட்டியடிப்பார் - தமிழிசை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் மோடி ‘ஹிட்’ கொண்டு விரட்டியடிப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்

Rohini

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பற்றி தமிழிசை கூறியது

“கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் மோடி 'ஹிட்' கொண்டு விரட்டியடிப்பார்,” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார் . இளைஞர்கள் மீது குறை சொல்வது தவறு. அவர்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கின்றனர். பிரதமர் மோடி நான்கு நாட்களுக்கு முன்னர், 51 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்றும்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்கிறார்கள். கரோனாவையே எதிர்கொண்ட பிரதமர் மோடி, கரப்பான்பூச்சி கட்சியையும் எதிர்கொள்வார்” என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பற்றி தெரிவித்துள்ளார்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தோற்றம்

இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் கட்சியானது தற்போது உருவாகியுள்ளது. இக்கட்சியானது, ஆட்சியின் மீது விரக்தியடைந்த மக்களுக்கான ஒரு இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது.

உருவான சில தினங்களிலேயே இக்கட்சியில் 40,000 பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் . இக்கட்சியின் எக்ஸ் பக்கத்தை மில்லியனுக்கும் அதிகமானோர் சமூக வளைத்தஆள் பக்கத்தில் பின்தொடர்கின்றனர்.

ஆட்சி மீது விரக்தி அடைந்த கட்சி

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் வேலை செய்த அபிஜித் தீப்கே என்பவர் இந்தக் கட்சியை தொடங்கி இருக்கிறார்

பதிவு செய்யப்பட்ட கட்சி கிடையாது

இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி கிடையாது என்றாலும், இளைஞர்களால் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கேளிக்கையான கட்சியாகும். ’மதச்சார்பற்ற - சோசலிச - ஜனநாயக - சோம்பேறி’ என்பதே இக்கட்சியின் கொள்கையாகும்.

மேலும் இக்கட்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது

அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட வேண்டும்

டிஜிட்டல் அமைப்பான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக

அக்கட்சியின் தேசிய அமைப்பாளராகத் தன்னை அறிவித்து, ஹரியாணாவை சேர்ந்த வழக்குரைஞர் சுதீர் ஜாக்கர் (35) இந்த விண்ணப்பத்தை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

மேலும் அதிமுக பிளவு குறித்து பேசிய இவர்

அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது குறித்து அவர்களது தொகுதி மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்களின் தீர்ப்பை மதிக்காமல் பதவியை ராஜினாமா செய்தது தவறு; தவெக அதை ஊக்குவிப்பது அதைவிட மிக மிக தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

=====================