பாரம்பரிய ஆடையில் பிரதமர் வருகை
PM Narendra Modi Trichy Visit in Tamil Nadu : திருச்சியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் NDA கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாரம்பரிய நடைமுறையான வேட்டி சட்டை ,துண்டுடன் திருச்சிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி
கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு
கொச்சியிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார் மோடி
திருச்சி விழா மேடையில் மோடி
புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்க பஞ்சப்பூர் வந்த மோடி விழா மேடையில் பங்கேற்று கொண்டார் ,எல் முருகன் வரவேற்பு உரையை வழங்கினார்.
புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி
சுமாா் ரூ. 5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறார் .அதற்கு அடிக்கல் நாட்டியும், கொடியசைத்தும் தொடங்கி வைக்கிறாா்.
புதிய ரயில்களை அர்ப்பணிக்கும் மோடி
அரசு நிகழ்ச்சி மற்றும் NDA கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி வந்திருக்கும் மோடி 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமா் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி நெல்லை - மங்களூரு, ராமேசுவரம்- மங்களூரு வாராந்திரி ரயில், நாகர்கோயில் - சாரளபள்ளி அம்ரித் பாரத், கோவை - தன்பாத் அம்ரித் பாரத் மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர்- காரைக்குடிக்கான பயணிகள் ரயில் என 5 புதிய ரயில்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.