ublic can lodge complaints at the Raj Bhavan; Arlekar's remarks spark fresh controversy. google
தமிழ்நாடு

பொதுமக்கள் ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம்:அர்லேகர் பேச்சால் மீண்டும் சர்ச்சை.

மக்களிடம் எதிர்ப்பார்ப்பு இருந்தால் ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்

Rohini

மக்கள் பிரச்சனைக்களுக்காக போரடுபவர்கள் ஆளுநரிடம் புகார் அளிக்கலாம்

 கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் அர்லேகர் பேசுகையில், "மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் தங்களுக்கு உதவி வேண்டுமெனில் ஆளுநர் மாளிகையை அணுகலாம். நீங்கள் என்னிடம் அளிக்கும் கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வுகான அறிவுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்

மீண்டும் சர்ச்சையில் ஆளுநை உரை

தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் கூறுங்கள். ஒன்றிணைந்து மக்களுக்காக செயல்படுவோம். வாக்களித்த மக்களுக்கு அவர்க்ளின் பிரச்சனைகள் உணர் முடியும் அவ்வாறு ஏதேனும் இருப்பின் அதை ஆளுநர் மாளிகையில் புகாராக தெரிவிக்கலாம் என்று கூறினார்

மதுரையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர், வைகை ஆற்றில் நீர் இல்லாமல் வெறும் மணலும், குப்பைகளும் மட்டுமே இருப்பதைச் சுட்டிக்காட்டி

நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான் என்றும், மதுரை இளைஞர்கள் வைகையை மீட்க முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்

யாரும் நடவடிக்கை எடுக்காவிட்டால், வைகை நதியை மீட்டெடுக்க ஆளுநர் மாளிகை களத்தில் இறங்கும் என்றும் அவர் எச்சரித்தார்

ஆளுநர் செயலுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ம்க்களிடம் ஏதேனும் புகார் இருந்தால் அதனை ஆளுநர் மாளிகையில் வந்து புகார் அளிக்கலாம் என்றும் பேசியிருந்தார் , இவ்விரு பேச்சுக்கும் தவெக அமைச்சர்களிடம இருந்து எதிர்ப்புகள் வழுத்துள்ளது

எதிர்ப்பு தெரிவித்த தவெக

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை த.வெ.க அரசு என்றைக்கும் அனுமதிக்காது என கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்த்து குறிப்பிடத்தக்கது

========================