தங்கத்தில் முதலீடு, முதலிடத்தில் இந்தியா
உலக அளவில இந்தியாவில தான் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகம். இங்கு குடும்பங்களில திருமணத்தில் இருந்து, விசேஷ நாட்களில் தங்கம் வாங்குற பழக்கம் காலம்காலமா இருந்துகிட்டு வருது. ஒரு குடும்பத்திற்கான பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுது.
பெண்களின் டெபாசிட் நகைகள் தான்
குறிப்பாக பெண்களின் நம்பிக்கையான டெபாசிட் அப்படின்னா அது தங்கம் தான். உக்ரைன், ஈரான் போர் காரணமா, உலக அளவில் தங்கத்தின் விலையானது ஜெட் வேகத்தில் உயர்ந்துச்சு. பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்ய இதனால், பற்றாக்குறை அதிகரிச்சு, விலையேற்றத்துக்கு வழி வகுத்துச்சு.
ஜனவரியில் உச்சம் தொட்ட தங்கம்
இந்த ஆண்டு தொடக்கத்தில அதாவது ஜனவரி மாதம் தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுச்சு. அதாவது 22 காரட் ஆபரணத் தங்கம், சவரன் ஒரு லட்சத்து .34 லட்சம் வரை உயர்ந்துச்சு. அதுக்கு போட்டியா வெள்ளியோட விலையும் கிராம் 420 ரூபாய் வரை உயர்ந்து, வெள்ளியில் பொதுமக்கள் முதலீடு செய்யும் போக்கும் அதிகமாச்சு.
ஏன்ன, தங்கம் எட்டாத உயரத்தில் இருந்ததாலே, அவசியமின்றி அத வாங்க வேண்டியது இல்லை அப்படின்னு மக்கள் முடிவு செய்ததுதான் காரணம். பிறகு நவம்பர் தொடக்கம் வரை தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், சவரன் ஒரு லட்சத்திற்கு கீழ் குறையவே இல்லை.
11 மாதங்களுக்கு பிறகு ரூ.1 லட்சத்திற்கு கீழ்
இனி எப்போதுமே தங்கம் ஒரு லட்சத்திற்கு கீழ் வராது அப்படின்னு மக்கள் விரக்தி அடைந்த நிலையில தான், நவம்பர் 17ம் தேதி அதிசயம் நிகழ்ந்துச்சு. 11 மாதங்களுக்கு பிறகு தங்கத்தோட விலை சவரனுக்கு ஒரு லட்சம் கீழ் வந்தது. அதேபோல வெள்ளி விலையும், கிராம் 200 ரூபாய் கீழ் சரிந்தது.
11 மாதங்களில பார்த்தோம்ன்னா, தங்கம் அதன் உச்சபட்ச விலையில் இருந்து சுமார் 33 சதவீதமும், வெள்ளி 58 சதவீதமும் வீழ்ச்சியை கண்டிருக்கு. 10 கிராமுக்கு 60,200 ரூபாய் வரை குறைந்து இருக்கு. அதேபோல வெள்ளி விலையும் உச்சத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை சரிந்து இருக்கு.
கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஒரு அவுன்ஸ் தங்கம் 3,544 டாலர்களாக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 41 டாலர்களாக விலை சரிந்துவிட்டது.
முதலீட்டாளர்கள் கவலை
இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கு. இன்னும் ஒரு வருஷத்திற்கு தங்கம் விலை இறக்கத்தில் தான் இருக்கும் அப்படின்னும் சொல்லப்படுது.
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு
தங்கம், வெள்ளியோட விலை இப்படி சரிவதற்கு முக்கிய காரணங்கள் அப்படின்னு பார்த்தீங்கன்னா, அமெரிக்காவில் எதிர்பார்த்ததை விட பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகமாகவே வைத்திருக்கும் அப்படின்னு சொல்லப்படுது.
எப்போதெல்லாம் பணவீக்கம் அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் ஃபெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைக்காமல் வைத்திருப்பது வாடிக்கை.
வட்டி உயர்ந்தால், தங்கம் உயரும்
வட்டி விகிதங்கள் உயரும்போது வட்டி வருமானம் தராத தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய மாட்டாங்க. வட்டி அதிகமாக இருக்கும் பிக்சட் டெபாசிட் மற்றும் பத்திரங்களின் பக்கம் அவங்க கவனம் செலுத்துவாங்க.
இதன் காரணமா தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரியும். இப்போ அதுதான் நடக்குது. அதேபோல அமெரிக்கா டாலரோட மதிப்பு அதிகரிச்சு வர்றதும், தங்கம், வெள்ளி விலை சரிய காரணமாக இருக்கு.
ஏன்னா, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை டாலரில் தான் நிர்ணயிக்கப்படுது.
அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் டிசம்பர் மாதம் நடக்க இருக்கு அப்போது வட்டி உயர்த்தப்படும் அப்படின்னு பரவலா பேச்சு அடிபடுது. மற்ற நாடுகளும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினா, டெபாசிட் முதலீடுகள் அதிகரிக்கும், தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறையும்.
தங்கம் விலை மேலும் குறையும்
தங்கம் விலை இன்னமும் விலை குறையவே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் சொல்றாங்க. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தினால் இன்னும். விலை சரியும்.
எனவே, வீட்டு விஷேசங்களுக்கு தங்கம் வாங்க வேண்டியவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பா அமைஞ்சு இருக்கு.
தங்கம் விலை இன்றும் சற்று குறைவு
சரி இன்னிக்கு தங்கத்தோட விலை எப்படி இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா, சவரனுக்கு 360 ரூபா குறைஞ்சு, 91 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை ஆகுது. வெள்ளி விலை மாற்றம் எதுவும் இல்லாம கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுது.
அதேசமயம், தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது சர்வதேச பொருளாதாரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கு. அதேபோல நிதி நிறுவனங்களுக்கும் பெரிய சிக்கலை உண்டாக்க இருக்கு. ஏன்னா, தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போது, நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடனை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டன.
நிதி நிறுவனங்களுக்கு நெருக்கடி
விலை சரிவு, அடகு வைக்கப்பட்ட தங்கத்தோன மதிப்பையும் குறைச்சு இருக்கு. இதனால தங்கத்தின் மதிப்பை விட கடன்தொகை அதிகமாக இருக்கும். அப்போ, கடன் வாங்கிய ஒரு பகுதியை உடனடியா திருப்பி செலுத்தனும் அப்படின்னு வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் தெருக்கடி கொடுக்கும் அப்படிங்கிற அச்சமும் எழுந்திருக்கு.
இன்னிக்கு தொடங்கி வரும் 25 நாட்களும் முகூர்த்த நாட்கள், இந்த காலத்தில இந்தியாவில மட்டும் 52 லட்சம் திருமணங்கள் நடக்க இருக்கிறதா புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடக்க இருக்கு. இதன் காரணமா சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது.
தங்கம் விலை சரிவில் இருப்பதால் இந்த சீசனில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். நகை மற்றும் ஆபரணங்கள் விற்பனை மட்டும் 1 புள்ளி 2 லட்சம் கோடிக்கு இருக்கும் அப்படின்னு மதிப்பிடப்பட்டு இருக்கு.
எனவே, இனி வரும் நாட்கள் தங்கம் வாங்குபவர்களுக்கு பெரிய ஜாக்பாட்டா இருக்க போகுது.
=========================