‘Quality Employment Scheme for Women’ – Tamil Nadu Government calls for tenders: CM Vijay’s bold move! ai
தமிழ்நாடு

‘மகளிருக்கு தரமான வேலைவாய்ப்புத் திட்டம்’ : டெண்டர் கோரும் தமிழக அரசு: முதல்வர் விஜய் அதிரடி!

பெண்களுக்கு புதிய ‘தரமான வேலைவாய்ப்புத் திட்டம்’. ஆலோசனை நிறுவனம் அமைக்க அரசு ஒப்பந்தம்.

Kavitha prasanna

‘Quality Employment Scheme for Women’ – Tamil Nadu Government calls for tenders: CM Vijay’s bold move!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்குவதற்கான புதிய மாபெரும் செயல் திட்டத்தைத் தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளின் தொடர்ச்சி

தமிழகத்தில் பெண்கள் நலனை முதன்மைப்படுத்தி, தவெக அரசு பல்வேறு முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,500 மற்றும் மாநிலம் முழுவதுமான இலவச பேருந்து பயணம் ஆகியவற்றுடன், 'அண்ணன் சீர்', 'தாய்மாமன் சீர்' உள்ளிட்ட பிற முக்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் புதிய செயல் திட்டத்தை அரசு தீவிரமாக தயாரித்து வருகிறது.

அதன்படி, மாநில அளவில் பெண்களின் பொருளாதார தரத்தை உயர்த்தும் நோக்கில், ‘மகளிருக்கு தரமான வேலைவாய்ப்பு’ என்ற புதிய சிறப்புத் திட்டம் வடிவம் பெறவுள்ளது.

ஆலோசனை நிறுவனம் தேர்வு – விரிவான கள ஆய்வு

இந்த மாபெரும் திட்டத்திற்கான முழுமையான செயல் திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக, தகுதியான ஒரு ஆலோசனை நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பணிகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இதற்காக, சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கீழ் இயங்கும் 'தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்' சார்பில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, தேர்வு செய்யப்படும் நிறுவனம் மாநிலம் முழுவதும் பெண்களின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலை குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்கள் குறித்தும் மிக விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வின் முக்கிய அம்சங்களும் 6 வார கெடுவும்

அரசின் ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஆலோசனை நிறுவனம் பின்வரும் முக்கிய அம்சங்களை விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

  • மாவட்டவாரியாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சாத்தியமான துறைகள் எவை?

  • பெண்களின் வேலைவாய்ப்பிற்குத் தேவைப்படும் திறன் மேம்பாட்டுத் தேவைகள் எவை?

  • பெண்கள் வேலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சவால்களுக்கான தீர்வுகள்.

  • சிறு குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்கள் வேலைக்குச் செல்லும்போது சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள்.

6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க நிபந்தனை

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இறுதிச்ஃப் செயல் திட்ட அறிக்கையை, இன்னும் 6 வாரங்களுக்குள் மாநில அரசிடம் அந்த நிறுவனம் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் நிலையான வேலைவாய்ப்புச் சூழல் விரைவில் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====