Special Classes Banned source:google,thamizhalai
தமிழ்நாடு

காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை.. மீறினால்? பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செப்டம்பர் 26 முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு, சிறப்பு வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kavitha prasanna

Quarterly Exam Holidays Announced for TN Schools: Special Classes Banned

பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 1 முதல் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்றுடனும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளையுடன் ( 24-09-2026) காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன.

இதையும் படிங்க : தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள்

நாளையுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகுப்புகளுக்குத் தடை

இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மானவ, மாணவிகளுக்கு விடுமுறை அளித்து ஓய்வு அளிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை மீறி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், அதற்கு அந்தந்தப் பள்ளியின் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகள் மீண்டும் திறப்பு

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அக்டோபர் 5-ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: AIADMK Reaches EC :இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா? தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!

=======