Railway Ministry approves regularisation of Trichy To Chennai 16807 16808 Tambaram Express Runs Weekly Five Days Here is Full Details in Tamil Source : IRCTC
தமிழ்நாடு

Trichy to Chennai: திருச்சி டு சென்னை இனி ஈசியாக ட்ராவல் பண்ணலாம்

Trichy to Chennai Train : திருச்சியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணிப்பது எனபது மிகவும் சவாலான ஒன்று , இந்த சிக்கலை பரிசீலித்து பகல் நேர ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Rohini

Trichy to Chennai Train 16807/16808 Tambaram Express Update : திருச்சியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது . இந்த சிக்கலை போக்க பல நாள் கோரிக்கையாக பகல் நேர ரயில் சேவை வேண்டும் என்பது ,அந்த வேண்டுகோளை பரிசீலித்து திருச்சி டு சென்னைக்கு ரயில் சேவையை தொடங்கிருக்கிறது இந்திய ரயில்வே.

சவாலான பயண சேவை

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ரயிலின் மூலம் பயணம் மேற்கொள்வது எனபது மிகவும் சிரமமான விஷயமாகும்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் சற்று இன்னும் சிரமம் அதிகம். இதைவிட முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணித்து ஆபத்தான முறையிலும் பயணத்தை மேற்கொள்ளகின்றனர் .

பயணத்தை எளிதாக்கிய பகல் நேர ரயில்

இந்த கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்துக்கு பகல் நேர சிறப்பு ரயில் இயக்கி வந்தது.

தஞ்சாவூர் - சென்னைக்கு நிரந்தர ரயில்

இந்த சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திருச்சி-தாம்பரம் (வண்டி எண்: 16807), தாம்பரம்-திருச்சி (வ.எண்: 16808) என இந்த ரயில் இனி நிரந்தர ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது பயணிகளை மகிழ்ச்சியை தந்துள்ளது .

ரயிலின் சிறப்பம்சங்கள்

இந்த ரயில் 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், ஏசி சேர் கார் பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

செவ்வாய் மற்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் 5 நாட்களும் இந்த பகல் நேர ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரயில் எங்கு எல்லாம் நின்று செல்லும்

இந்த ரயில் திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நிறைவேறியுள்ளது .

வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் ரயில்

இந்த ரயில் 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், ஏசி சேர் கார் பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

செவ்வாய் மற்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் 5 நாடகளில் மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும். சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்றி இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

==============