Rain forecast for 7 districts tn Meteorological Department reports 50% excess Southwest Monsoon rainfall this year.  google
தமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழை : ”இந்த ஆண்டு 50% கூடுதலாக தென்மேற்கு மழை” : வானிலை மையம் தகவல் ..!

இந்த ஆண்டு இயல்பை விட தென்மேற்கு பருவமழையானது 50 % கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

Rohini

இயல்பைவிட கூடுதலாக தென்மேற்கு பருவமழை

இந்த் ஆண்டு இயல்பை விட கூடுதலாக 50 % தென்மேற்கு பருவமழையானது பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது .

அதன்படி இந்த தென்மேற்கு பருவமழையானது சென்னையை பொருத்த வரையில் இயல்பை விட 46 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று மழைபெறும் மாவட்டங்கள்

அதன்படி இன்று தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ள குறிப்பில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 இலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

எதிர்வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம்

அதன்படி இன்றுமுதல் 29-06-2026 வரை,தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொறுத்த வரையில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையை பொறுத்த வரையில்் இன்று (25-06-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கணித்துள்ளது.

======================