Ramadan Festival 2026 Wishes : Greetings from political party leaders google
தமிழ்நாடு

Ramadan 2026 : ரம்ஜான் பண்டிகை : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

Political Leaders Wishes Ramadan 2026 : புனித ரம்ஜான் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Rohini

புனித ரமலான் பண்டிகை

Political Leaders Wishes Ramadan 2026 : உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை நோன்பு இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் இந்த ரம்ஜான் நோன்பு ஒன்றாகும். அதன்படி, 30 நாட்கள் நோன்பின் முடிவில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டின் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனிடையே, ரம்ஜான் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

தமிழக முதல்வர் வாழ்த்து

நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

எடப்பாடி பழனிசாமி

திருக்குர்ஆன் புனித நூல் அருளப்பட்ட மேன்மை மிகு ரம்ஜான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்து செய்து குறிப்பில் தெரிவித்துள்ளார்

வைகோ

திருக்குர்ஆன் புனித நூல் அருளப்பட்ட மேன்மை மிகு ரம்ஜான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்து குறிப்பில் தெரிவித்துளளார்.

டிடிவி தினகரன்

ரம்ஜான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தீர்ந்து உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் எனக்கூறி புனித ரமலான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை

இஸ்லாமிய பெருமக்களின் மிக உன்னதமான பண்டிகை ரம்ஜான் என்றும் ஒழுக்கம், தியாகம், மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் முஸ்லிம் சமூகத்தின் பண்புகள் பாராட்டத்தக்கது. அன்பு, பகிர்வு மற்றும் சகோதரத்துவத்தை நடைமுறையில் கடைபிடிக்கும் இவர்களின் வாழ்க்கை முறை அனைவருக்கும் முன் மாதிரியாக விளங்குகிறது என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.`

அன்புமணி

இஸ்லாம் போதிக்கும் இந்த நற்குணங்கள் அனைத்தும் உலகமெங்கும் நிறைய வேண்டும். உலகின் மிகப்பெரிய சாத்தானான மது ஒழிக்கப்பட வேண்டும்.

உலகம் முழுவதும் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் அன்புமணி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.