பாமகவில் ராமதாஸ் - அன்புமணி மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது.
ஒரு பக்கம் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, புதிதாக மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை நியமிக்கிறார்.
ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குபவர்களுக்கு அதை பொறுப்பை கொடுத்து அழகு பார்க்கிறார் அன்புமணி.
மேலும், கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, பொதுக்குழு கூட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் அவர் நடத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பாமக உட்கட்சி பிரச்சினைக்கு திமுகவே காரணம் என்று அன்பமணி, குற்றம்சாட்டி இருந்தார்.
கட்சியின் நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையேயான பிரச்சினையில் திமுக தலையிடுவதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து சென்னை வந்த ராமதாசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.
பாமக உட்கட்சி பூசலுக்கு, திமுக காரணம் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்த அவர், அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய், கடைந்தெடுத்த பொய் என்று சாடினார்.
அன்புமணி நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, போகப், போகத் தெரியும் என்ற பாடலை பாடி அவர் பதில் கொடுத்தார். பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.
இதனிடையே, சேலத்தில் அன்புமணி நடத்தி வரும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, அந்த மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏவான அருள் கலந்து கொள்ளவில்லை.
ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் இனி குறைய வாய்ப்பே இல்லை, இருவரும் பிடிவாதமாக இருப்பதே காரணம் என்று குமுறுகின்றனர் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
இந்தநிலை நீடித்தால், இந்த ஆண்டுக்குள் கட்சி உடைவதை யாரும் தடுக்க முடியாது என்று அவர் வேதனை தெரிவிக்கின்றனர்.
====