பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கவாறே இருக்கிறது. நிர்வாகிகள் நீக்குவது, நியமிப்பது போன்ற அதிரடிகள் ஓய்ந்தபாடில்லை.
ராமதாஸ் - அன்புமணி முற்றும் மோதல் :
தன்னை எதிர்த்து பேசிய பாமக கொறடா அருளை கட்சியில் இருந்தே நீக்குவதாக அன்புமணி அறிவித்தார். நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை, பாமக கொறடாவாக அவர் தொடருவார் என்று அதிரடி காட்டினார் ராமதாஸ்.
அருளுக்கு எதிராக அன்புமணி :
இதற்கு அசராத அன்புமணி, இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். பாமக கொறடா பதவியில் இருந்து எம்எல்ஏ அருளை நீக்க வலியுறுத்தி அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்தனர். அன்புமணி அளித்த பரிந்துரை கடிதத்தை அவர்கள் வழங்கினர். பாமக எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேஷ்வரன், சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்தனர்.
பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்க வேண்டும் என, அந்தக் கடிதத்தில் அன்புமணி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதற்கு போட்டியாக, பாமகவின் கொறடாவாக தானே தொடர்வேன் என்று ராமதாஸின் ஒப்புதல் கடிதத்தோடு, சபாநாயகரை எம்.எல்.ஏ., அருளும் சந்திக்க உள்ளார்.
பாமகவில் நீடிக்கும் இந்த மோதல் போக்கு, தொண்டர்களிடையே பெரும் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது.
====