Ramadoss-led PMK has decided to join DMK alliance, announcement will be made as early as possible 
தமிழ்நாடு

திமுக கூட்டணி, ராமதாஸ் ”பச்சைக்கொடி”! : பிப்ரவரியில் அறிவிப்பு...

Ramadoss-led PMK has decided to join DMK alliance ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இடம்பெற முடிவு எடுத்து விட்டதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Kannan

பிளவுபட்டு கிடக்கும் பாமக

Ramadoss-led PMK has decided to join DMK alliance, announcement will be made as early as possible : ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக கூட்டணி அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் ( NDA ) இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.

ராமதாஸ் - யாருடன் கூட்டணி?

இதன்காரணமாக ராமதாஸ் தரப்பு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது. ஒன்று அவர்கள் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் அல்லது தவெக கூட்டணிக்கு செல்ல வேண்டும். ராமதாசையும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், அதற்கு சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

யாருடன் கூட்டணி - ராமதாஸ் ஆலோசனை

ராமதாஸ் பக்கம் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் திமுக ஆதரவாளர்கள் தான். இந்தநிலையில், பாமக தலைமை நிர்வாக குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நடைபெற்றது. . இக்கூட்டத்தில் பாமக யாருடன் கூட்டணி வைக்கலாம் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்பு

ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார். மற்ற கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு?, உங்களது கருத்து என்ன? என தனித்தனியாக கேட்கப்பட்டது.

திமுக கூட்டணிக்கு பச்சைக்கொடி?

ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் திமுகவுடன் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. ஒருசிலர் மட்டுமே கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவற்றை மீட்டெடுக்க ஒன்றிய அரசின் ஆதரவு தேவை என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இறுதி முடிவை எடுக்கும் ராமதாஸ்

பெரும்பாலானோர் திமுக கூட்டணிக்கு குறித்து வலியுறுத்திய நிலையில், அதிமுக கூட்டணியில் ஏற்கனவே அன்புமணி இருப்பதால், திமுக கூட்டணியே சிறந்தது என்று இறுதி முடிவு எடுக்கும் மனநிலைக்கு ராமதாஸ் வந்து விட்டார் எனத் தெரிகிறது. இருப்பினும் கூட்டணி விவகாரத்தில் அவசரம் காட்டாமல் மேலும் ஒரு வாரம் வரை காத்திருந்து அடுத்தமாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராமதாஸ் செல்லப்பிள்ளை திருமா

ஆலோசனை கூட்டத்துக்கு பின் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நிருபர்களிடம் கூறுகையில், ‘யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம். அரசியலில் என்ன வேணாலும் நடக்கலாம். விசிக தலைவர் திருமாவளவனுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

அண்ணன் திருமாவளவன்

ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன். வன்னியர்களையும், தலித் மக்களையும் 2 தண்டவாளமாக பார்த்துக் கொண்டிருப்பவர் ராமதாஸ். திருமாவளவன் எங்களுக்கு அண்ணன். ராமதாசுக்கு திருமாவளவன் மகன் போல’ என்றார்.

திமுக கூட்டணியில் ராமதாஸ்

இதன் மூலம் திமுக கூட்டணியில் ராமதாசின் பாமக இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். திமுக கூட்டணி சென்றால் கௌரவமான இடங்கள், வெற்றி நிச்சயம் என்ற மனநிலையில் ஜி.கே. மணி உள்ளிட்டோர் உறுதியுடன் நிற்பதாக தைலாபுர வட்டாரங்கள் கூறுகின்றன.

=============