Ramadoss vs Anbumani Ramadoss Issue PMK MLA Received Notice 
தமிழ்நாடு

ராமதாசா? அன்புமணியா? முடிவெடுங்க..: பாமக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்

Ramadoss vs Anbumani Ramadoss Issue : ராமதாசா? அன்புமணியா? யார் தலைமையை விரும்புகிறீர்கள் என்று, பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Kannan

ராமதாஸ் - அன்புமணி உச்சக்கட்ட மோதல் :

Ramadoss vs Anbumani Ramadoss Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையே மோதல் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் விரைவில் முடிவுக்கு வரும் என்கின்றனர். ராமதாசுக்கு ஆதரவாக ஜி.கே மணி, எம்எல்ஏ அருள் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பின்னால் நிற்கின்றனர். கட்சி எம்எல்ஏக்கள், கொறடா, பாமக மாவட்ட செயலாளர்கள் தொடங்கி இருவரும் மல்லுக்கட்டி நிற்பதால், பாமக இரண்டாக உடையும் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது

பாமக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் :

நிர்வாக குழுவை மாற்றி அமைத்து கூட்டம் நடத்திய ராமதாஸ், அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேசன் ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார். இந்தநிலையில், அவர்களுக்கு தனித்தனியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

மூன்று பேரும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு விசாரணைக்கு ஆட்சியாக வேண்டும் என கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் அன்பழகன் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக மூவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அன்புமணி வழியில் எம்எல்ஏக்கள் :

அன்புமணி என்ன முடிவு எடுக்கிறாரோ? அதையே நாங்களும் செய்வோம்!" என மூன்று எம்எல்ஏக்களும் கூறி வருகின்றனர். அவரது ஆலோனைப்படி, ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராவதை அவர்கள் தவிர்த்தால், தந்தை - மகன், அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எனக் கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்தும் முடிவு எதையும் எடுக்க முடியாமல் திணறும் பாமக, தொடர் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

====