Rat Bit Woman In Trichy GH Opposition Slams TVK Govt CM Vijay google
தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் எலிக்கடி சம்பவம்... : "Nero அரசு" எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டியை எலி கடித்த சம்பவத்திற்குத் தவெக அரசுக்குக் கடும் கண்டனம். உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்.

Kavitha prasanna

Rat Bit Woman In Trichy GH Opposition Slams TVK Govt CM Vijay

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்துக் குதறிய சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எலி கடித்து விரல் இழப்பு – இதுதான் தவெக அரசின் நிலையா?

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவமனை பராமரிப்பின்மை

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலிகள் கடித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இச்சம்பவமே சாட்சி.

அரசின் பதில் என்ன?

அரசை நம்பி சிகிச்சை பெற வந்த மூதாட்டி எலி கடித்துக் கால் விரலை இழந்து நிற்கும் நிலையில், இந்தத் 'தவெக அரசு' இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

அமைச்சர்கள் மீது சாடல்

மக்கள் ஒருபுறம் அவதிப்பட்டுக்கொண்டிருக்க, சுகாதாரத்துறை அமைச்சரோ ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு செல்ஃபி பதிவிட்டு வருகிறார்.

‘நீரோ’ அரசு என விமர்சனம்

"நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கெட்டால் என்ன?" என்று 'பிளாஸ்டு பிளாஸ்டு' கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய 'நீரோ' (Nero) அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இன்று முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க விடுமுறை எடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

எதிர்க்கட்சியின் கோரிக்கைகள்

எலி கடியால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உடனடியாக உரிய முறையில் உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

விரலை இழந்துள்ள அந்தப் பெண்ணிற்கு தகுந்த இழப்பீட்டை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

=====