RB Udhayakumar Released Video on CM MK Stalin About Rain Water Damages Road in Street Read News in Tamil Google
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் தீர்ப்பு சொல்வாரா - ஆர்.பி.உதயகுமார் கேள்வி?

RB Udhayakumar Video on CM MK Stalin : காணாமல் போன சாலைகளை முதல்வர் கண்டுபிடித்து தருவாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Baala Murugan

RB Udhayakumar Video on CM MK Stalin : விளம்பர வெளிச்சம் தேடுகின்ற மதுரை விழாவில் பயனாளிகளை ஏமாற்றும் நாடகத்தை நிறுத்தி விட்டு, மக்களுக்கு பயனுள்ள நலத் திட்டங்களை வழங்குவதற்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வீடியோ வெளியிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாநகராட்சி மேயரையும், மண்டல தலைவர்களையும், சாலைகளையும் வரும் டிசம்பர் 7ஆம் தேதி மதுரை வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுபிடித்து தருவாரா? என முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க் கட்சித் துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

கேள்வி எழுப்பிய ஆர்.பி. உதயக்குமார்

இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தமிழ்நாடு தத்தளித்து வருகிறது. இந்தப் பருவமழையால் மதுரையில் சேதமடைந்த சாலைகள், மாநகராட்சி மேயர், மண்டல தலைவர்களையும் காணவில்லை என மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி மதுரை வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இவற்றை கண்டுபிடித்து மக்களுக்கு தீர்ப்பு சொல்வாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவட்ட அமைச்சர்கள் வழிநடத்துகின்றனர்

சிறிய மழை பெய்தாலும் இடுப்பு ஒடியும் வகையிலே வாகன ஓட்டிகள் உயிரை கையிலே பிடித்து சாகச பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் மதுரைவாசிகள் உள்ளனர். ஒருபுறம் வடகிழக்கு பருவமழை, மற்றொரு புறம் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள். இதனைத் தாண்டி மதுரையில் விளம்பர விழாவை நடத்துவதற்கு, ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்தையும் மாவட்ட அமைச்சர்கள் வழிநடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அவர்களுக்கு மனமும், நேரமும் இருந்தால், முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று காணாமல் போன சாலைகளை மீட்டு தருவார்களா? அதே போல் காணாமல் போன மதுரை மாநகராட்சி மேயரையும், மண்டல தலைவர்களையும் மீட்டுத் தருவாரா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளம்பர வெளிச்சம் தேடுகின்ற மதுரை விழாவில் பயனாளிகளை ஏமாற்றும் நாடகத்தை நிறுத்தி விட்டு, மக்களுக்கு பயனுள்ள நலத்திட்டங்களை வழங்குவதற்கும் பணிகளை மேற்கொள்வதற்கும், இந்த விழாவை பயன்படுத்திக் கொண்டு ‌முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

குழியில் விழுந்த உயிர்பலி அச்சம் ஏற்படுமா

தற்போது சிறிய மழைக்கே மதுரை மாநகர் சாலைகள் பல்லாங்குழிகளாக மாறி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை நான்கரை ஆண்டு காலம் திமுக அரசு காலதாமதம் செய்து அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

அந்தப் பணிக்காக ரோட்டில் தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. அந்த குழியிலே விழுந்து உயிர்பலி ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

மண்டல தலைவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பாரா

144 தடை உத்தரவு பிறப்பித்த ஆட்சியர் அவற்றை மண்ணை போட்டு மூடாமல் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மரண பயத்தில் பயணம் செய்கின்றனர். ஆகவே மதுரைக்கு வரும் முதலமைச்சர் மரண பயத்தில் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கும், அதே போல மதுரையில் மேயர், மண்டல தலைவர்கள் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பாரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.